பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் பண்பு 59

  • * Gr৫ধাঞ্জে அது?’’

"நான் பொருள் தேடும் பொருட்டுச் செல்கிறேன் என்ற செய்தியை நீயே அவளிடம் சொல்ல வேண்டும்.”

"நீங்களே சொல்லி விடையும் பெற்றுப் போவது தான் தக்கது.'

'நான் சொல்வதும் அவள் மனமுவந்து விடை கொடுப்பதும் நடக்கிற காரியமா? அவளுக்கு முன் இதைச் சொல்வதற்கே என் நா எழாது; ஒருவாறு துணிந்து சொல்லிவிட்டாலும் அவளிடம் உண்டாகும் வேதனையைக் கண்டேளுஞல், அப்புறம் அவளை விட்டுச் செல்லக் கால் எழாது.”

'நன்முக இருக்கிறது. நீங்கள் சொல்வது! உங்களால் முடியாததை நான் மாத்திரம் செய்ய முடியுமா? "அடுத்த வீட்டுப் பிராமணு, பாம்பைப் பிடி, அல்லித் தண்டு போல் குளிர்ந்திருக்கும் என்ற கதையாக இருக்கிறதே!'

"நீ இந்த உபகாரத்தைச் செய்யத்தான் வேண்டும். களவுக் காலத்தில் நீ செய்த உபகாரங்களையெல்லாம் நான் மறக்கவில்லை. அவற்றைப் போல் இப்போது இந்த உதவியை நீதான் செய்ய முடியும். அவள் உள்ளம் அறிந்து, செவ்வி அறிந்து, தக்க சொற்களால் பக்குவ மாகச் சொல்லும் ஆற்றல் உனக்கு உண்டு. நீ வேறு, அவள் உள்ளம் வேறு என்பது இல்லை. இந்தச் செய்தியைச் சொல்லி, நான் வரும் வரையிலும் ஆறுதல் கூறிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தால், நான் விரைவில் வந்துவிடுவேன்.' . . -

தோழி அவன் கூறுவதில் உள்ள நியாயத்தை உணர்ந் தாள். தலைவன் விரும்பியபடியே செய்ய ஒப்புக் கொண்டாள்.