பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - மனை விளக்கு

"நீங்கள் போகும் நாடு எங்கே இருக்கிறது?’’

'நம் நாட்டுக்கு அப்பால் நெடுந்துாரத்தில் பாலை நிலம் ஒன்று உண்டு. அதற்கு அப்பால் உள்ள நாட்டுக்குச் செல்லப் போகிறேன்.”

"அந்தப் பாலை நிலத்தைக் கடந்தா செல்லவேண் டும்?’ என்று தோழி கேட்டாள்.

"ஆம்."

"நீரும் நிழலும் அற்ற பாலைவனத்தில் எப்படிப் போவது? உணவும் புனலும் தங்க நிழலும் இல்லாமல் சுடுகாட்டைப்போல விரிந்து கிடக்கும் என்று சொல்வார் களே! அதன் வழியாகப் போவது அரிதல்லவா?”

"அது செல்வதற்கு அரிய வழிதான். ஆனாலும் வேற்று நாட்டுக்குப் போவதற்கு அந்த ஆரிடை (அரியவழி)யைதி தவிர வேறு புகல் இல்லை. வாழ்க்கையில் தனியின்பத்தைப் பெறுவார் யாரும் இல்லை. இன்ப துன்பங்கள் மாறி மாறித் தான் வரும். வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளை ஈட்ட வேண்டுமானல் அதற்கு முன் இந்த அரிய பாலை நில வழியைக் கடந்துதான் செல்லவேண்டும். பின் ளுலே வரும் இன்பத்தை எண்ணி முன்னலே எதிர்ப்படும் துன் பங்களைப் பொறுத்துக்கொண்டால்தான் செய்யும் செயல் நிறைவேறும்.'

தோழி சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். 'உணவு கிடைக்காத அந்த வழியில் எப்படிப் போவது?’ என்று கேட்டாள்.

'உணவு கிடைக்காது என்று சொல்வதற்கில்லை. நாம் நாள்தோறும் உண்ணும் அறுசுவை உண்டி அங்கே