பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் பண்பு 6i

கிடைக்காது என்பது உண்மைதான். ஆலுைம் அங்கேயும் இயற்கை வழங்கும் உணவு ஒன்று உண்டு.” *

"இயற்கை தரும் உணவு என்ருல் எனக்கு விளங்க வில்&லயே!”

பால நிலத்தில் அங்கங்கே சில இடங்கள் பசிய நில மாக இருக்கும். பாலை நிலத்தை அடுத்த வேற்று நாட்டு நிலப்பரப்பு வேறு இருக்கிறது. அங்கே விளாமரங்கள் இருக்கின்றன. எவ்வளவோ காலமாக வளர்ந்த மரங்கள் அவை. வேர் ஆழமாகச் சென்றிருக்கும். பார் பகும்படி கீழ் இறங்கின வேரையுடைய மரங்கள் அவை. நீண்டு உயர்ந்த கிளைகளை உடையவை'

அப்படியா அங்கே மரங்களும் உண்டென்று சொல் லுங்கள்.”

"ஆம்; விழுமிய கொம்புகளையுடைய விளாமரங்கள் இருக்கும்; மிக உயரமாக வளர்ந்தவை. அவற்றின் அடி மரம் பொரிந்து சுரகரப்பாக, உடும்பின் தோல்போல இருக்கும். துரத்திலிருந்து பார்த்தால், உடும்தன் இல் டிக்கொண்டாற்போல அந்த மரம் தோற்றம் அளிக்கும்.”

அதெல்லாம் சரி, வேர் இருக்கும், கொம்பிருக்கும், மரம் இருக்கும் என்று சொல்கிறீர்களே! அவைகளெல் லாம் இருந்து என்ன பயன். பழம் உண்டா?’

“மரத்திலிருந்து பழங்கள் தாமே காம்பினின்றும் இற்று விழுந்து கிடக்கும். கீழே பச்சைப் பசேலென்று டெர்ந்து பரவியிருக்கும் பசிய பயிரின் மேல் உதிர்ந்து அந்த விளாம்பழங்கள் பந்துகளைப்போலத் தோற்றம் அளிக்கும். அழகான பச்சைக் கம்பலத்தைப் பரப்பி மக அளிர் பந்தாடுகிருர்கள்; பிறகு விளையாட்டெல்லாம் ஒழிந்து