உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மனே விளக்கு

பந்துகளை அட் படி அப்படியே போட்டுவிட்டுப் போளுல் எப்படி இருக்கும்? அந்த மாதிரி, கம்பலத்தைப் போன்ற பைம்பயிரின் மேல் விழுந்த விளாம்பழங்கள் இருக்கும். அங்கே இருப்பவர்களுக்கும் வழி நடப்பவர்களுக்கும் அந்த வெள்ளிலே (விளாம்பழம்) உணவாக உதவும், அத் தகைய வழியிலேதான் நான் போகப் போகிறேன்.”

'அப்படியா போகும் வழியில் பைம் பயிரும் விழுக் கோடுடைய நெடிய விளாமரமும் ஆட்டு ஒழிந்த பந்து போல வீழ்ந்த வெள்ளிலும் இருக்குமானல், அச்சமின்றிச் செல்லலாமே. அதோடு, வேற்று நாட்டுக்குச் சென்ருல் பொருள் வேறு கிடைக்கும்' என்று தோழி கூறித் தலை வனே வாழ்த்தினுள்.

தலைவன் தன்னுடைய சிக்கலான நிலையில் ஒர் அரிய உதவி கிடைத்ததே என்று எண்ணி ஆறுதல் பெற்ருன். செல்வதற்கரிய வழியிலே விளாம்பழம் கிடைத்தது போல இருந்தது. அது.

மனத்துக்குத் துன்பத்தை அளிக்கும் செய்தியைத் தலைவிக்கு எப்படித் தெரிவிப்பது என்ற யோசனை இப்போது தோழிக்கு வந்துவிட்டது. தலைவியின் உள்ளம் அறிந்தவளாகையால் எப்படியாவது மெல்லச் சொல்லி விடலாம் என்று துணிந்தாள். என்ன தந்திரமாகச் சொன்னலும் தலைவி வருந்துவாள், அவள் முகம் வாடும் என்று நினைத்தாள். 'எப்படி அவர் போவதற்கு உடம் பட்டாய்?’ என்று கூட அவள் கேட்பாளோ என்ற ஐயம் வேறு எழுந்தது. எப்படியானலும் அவளுக்குச் சொல்லி விட வேண்டியதுதான்’ என்று முடிவு கட்டினுள். மெல்லச் சொல்லிவிட்டாள். ஆனல் தலைவி என்ன செய்தாள், தெரியுமா? அதுதான் ஆச்சரியம்!

தலைவன் பிரியப் போகிருன் என்பதை அவள் முன்பே குறிப்பாக உணர்ந்திருந்தாள். ஊருக்குப் போகிறவர்கள்