பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் பண்பு 63

குழந்தைக்கு இனிய பண்டங்களைக் கொடுத்துப் போக்குக் காட்டுவது போலச் சில நாட்களாகத் தன் காதலன் வழக்கத்தையும் விட அதிகமாக அருமை பாராட்டி வருவதை அவள் கவனித்தாள். இல்லறத்தின் பெருமை யையும், பொருளின் இன்றியமையாத் தன்மையையும், ஆடவர்களின் கடமையையும் அவன் இப்போதெல்லாம் எடுத்துக் கூறுவதை அவள் கேட்டாள். காரணம் இல்லா மல் அவற்றை அவன் எடுத்துச் சொல் வாளு? அவன் தான் பிரியப் போவதை முன் கூட்டியே அவளுக்குக் குறிப்பாகப் புலப்படுத்தும் செயல்கள் அவை. அதனுல் தலைவிக்கு அவன் பொருளிட்டப் பிரியப் டோகிருன் என்பது தெரியும்; அந்தப் பிரிவை ஏற்பதற்கு ஆயத்தமாகவே இருந்தாள்.

இப்போது தோழி மிகவும் தியங்கித் தியங்கிச் செய்தி யைச் சொன்னுள், விளாம்பழம் உணவாகக் கிடைக்கும் அருவழியிலே போகப் போவதை உரைத்தாள். மிகவும் நிதானமாக, பொறுமையாகத் தலைவி அவள் சொன்ன வற்றைக் கேட்டாள். -

"நல்ல காரியம் செய்தாய்' என்று தலைவி கூறிய போது தோழிக்குத் தூக்கி வாரிப்போட்டது. அதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. முகம் வாடித் துன்புழந்து தன்னைக் கடிவாள் என்று எதிர்பார்த்தாள். ஆளுல் அவளோ, 'கன்று செய்தனை' என்றல்லவா சொல்கிருள்! மேலும் தலைவி பேசுவது காதில் விழுந்தது.

'சேயிழையே! இப்படித் தலைவி தோழியை விளித் தாள். செம்பொன்னலாகிய இழைகளை அணிந்தவள் தோழி என்பது இன்றைக்குத்தான அவளுக்குத் தெரியும்? தன் உள்ளத்தில் கோபம் இன்மையைத் தெரிவிப்ப தற்காக அப்படி அருமையாக அழைத்தாள். பிறகு-?