பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் பண்பு 65

முடியும்? ஆதலின் செயல்படும் மனத்தினராகிச் செய் பொருளுக்காக வீட்டைவிட்டு அகல்வார்கள். அவர் களே ஆண்மை உடையவர்கள்; ஆள்வினையிற் சிறந்த வர்கள்; உத்தமமான ஆடவர்கள். அப்படி அகல்வது பொருளிட்டுவதற்குரிய இயல்புதான். அது அதன் பண்பே.' r ;

தோழிக்கு, 'அது அதன் பண்பே' என்ற முடிவு காதில் தண்மையாக விழுந்தது. "தலைவியினுடைய அறிவுதான் எவ்வளவு சிறப்பானது!’ என்று வியந்து, செயல் மறந்து நின்ருள் அவள்.

'பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு உடும்புஅடைந் தன்ன நெடும்பொரி விளவின் ஆட்டொழி பந்திற் கோட்டுமூக்கு இறுபு கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம் வெள்ளில் வல்சி வேற்றுநாட்டு ஆரிடைச் சேறும் நாம் எனச்சொல்லச், சேயிழை! நன்றெனப் புரிந்தோய்; நன்றுசெய் தனையே; செயல்படு மனத்தர் செய்பொருட்கு அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே

  • சிவந்த பொன்னல் ஆன அணிகளே அணிந்த தோழி! 'பூமி பிளக்கும்படி இறங்கிய வேரை உடைய, உயர்ந்த கிளைகளையும் உடும்பு ஒட்டிக் கொண்டாற் போன்ற நீண்ட பொரிதலையும் உடைய விளாமரத்தின், விளையாட்டு (நின்ற பிறகு) ஒழிந்துகிடந்த பந்துகளைப் போலக் கிளையிலிருந்து(முதிர்ந்தமையாலே) காம்பு இற்று, பச்சைக் கம்பலத்தைப் போன்றுள்ள பசிய பயிரின்மேல் விழுந்து கிடக்கும் பழமாகிய உணவை உண்ணுவதற் குரிய, வேற்று நாட்டுக்குச் செல்லும் (கடப்பதற்கு) அரிய வழியில்போவோம் நாம்' என்று(தலைவன்) சொல்ல,

மனே-5