பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மனை விளக்கு

"நல்லது” என்றுகூறி அதை விரும்பி உடம்பட்டாய். நீ நல்ல காரியத்தைச் செய்தாய்; ஆடவர் (தம் எண்ணத் தைச்) செயலாகச் செய்யும் உள்ளத்தைப் படைத்த வராகி, தாம் ஈட்டும் பொருளுக்காக (வீட்டை விட்டு) அகன்று செல்வர்; அப்படிச் செல்வது பொருள் தேடும் செயலின் இயல்பே ஆகும். (வருந்துவதற்குரிய காரணம் ஒன்றும் இல்லை.)

சேயிழை சேறும் என்று சொல்ல, புரிந்தோய்; செய்தன; ஆடவர் அகல்வர்; அது பண்பு என்று கூட்டுக.

பார் பக-பூமி பிளக்க வீழ்ந்த-இறங்கிய விழுக் கோடு-உயர்வையுடைய கிளை. அடைந்தன்ன-பொருந் திற்ை போன்ற. பொரி-பொரிதலையுடைய, ஆட்டு ஒழி பந்தின்-விளையாட்டினின்றும் ஒழிந்த பந்துகளைப் போல. கோட்டு மூக்கு இறுபு-கிளையிலிருந்தும் காம்பு இற்று. கம்பலத்தன்ன-கம்பளத்தைப் போன்ற ைபம்பயிர்-பசிய பயிரிலே தாஅம்-விழுந்து கிடக்கும். வெள்ளில்-விளாம் பழம். வல்சி-உணவு. ஆர் இடை-அரு இடை, கடப்ப தற்கரிய இடைவழியிலே. சேறும்-செல்வோம். சே இழை. செம்பொன் லைான அணிகளே அணிந்தோய். புரிந்தோய்விரும்பினய், செயல்படும் மனத்தர்-நினைத்ததைச் செய ல்ாகச் செய்யும் கருத்துடையவர். *

துறை : பொருட் பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. х "பொருள் சட்ட என் காதலியைப் பிரிந்துசெல்வேன். என்று தலைவன்கூற, அந்தப் பிரிவுக்கு இணங்கிய தோழி யினிடம் தலைவி அவள் செய்த செயலை அறிந்து மகிழ்ந்து சொல்லியது' என்பது இதன் பொருள்.

இந்தப் பாடலைப் பாடியவர் பெயர் தெரியவில்லை.

இது நற்றிணையின் 24-ஆம் பாட்டு.