பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படிப் போவாள்!

பிறர் அறியாமல் அன்பு செய்த காதலனும் காதலி யும் மணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணினர்கள். காதலன் பரிசம் போட்டுக் கல்யாணம் செய்வதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கினன். ஆளுல் காதலியின் தாய் தந்தையருக்கு அவளே வேறு யாருக்கோ மணம் செய்து கொடுக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. காதலியின் உயிர்த்தோழி இதை உணர்ந்தாள். குறிப்பாகத் தலைவிக்கு இன்ன தலைவன்மேல் அன்பு அமைந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தினுள். அவர் கள் அந்தக் குறிப்பை உணரவே இல்லை.

ஒரு தலைவனிடத்தில் தன் நெஞ்சைப் பறிகொடுத்த தலைவி வேறு ஒருவனை மனத்தாலும் நினைப்பாளா? கற்பிலே சிறந்து நிற்பவள் அவள். ஆகவே காதலர் இருவரும் என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள். உயிரைவிட நாணம் சிறந்தது. அதைவிடக் கற்புச் சிறந்தது. ஊரார் பழி கூற, தன் நாணம் அழிய தஐல் வனோடு புறப்பட்டுவிடுவதென்று தலைவி தீர்மானித்தாள். தலைவன் சொன்னதுதான் அது. அதற்கு அவள் இணங் கிள்ை; அவள் தோழியும் இணங்கிளுள்.

குறிப்பிட்ட நாளில் தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு போய்விட்டான். அவள் போன பிறகுதான் தம்முடைய அறியாமையை நினைந்து வீட்டில் உள்ள வர்கள் வருந்தினர்கள். தலைவியைப் பெற்ற நற்ருய் நைந்தாள்; அவளை ஊட்டியும் சீராட்டியும் தாலாட்டியும் வளர்த்த செவிலித் தாயும் புலம்பினள். வீடே அலமந்து நின்றது. தலைவியின் இளமையையும். மெல்லிய இயல்பை