பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியின் சினம்

இயற்கைத் தேவியின் எழில் நலம் குலுங்கும் மலைப் பகுதி அது குறிஞ்சி நிலம். அந்த நிலத்து மடமகளும் வேறு ஒரு மலைக்குத் தலைவனகிய மைந்தன் ஒருவனும் பிறவிதோறும் தொடர்ந்து வரும் ஊழின் வன்மையால் சந்தித்தனர். அவர்களிடையே காதல் முகிழ்த்தது; அளவளாவினர். எல்லா வகையாலும் ஒப்புடைய அவர் களுடைய களவுக் காதல் வளர ஒரு கொள் கொம்பு வேண்டியிருந்தது. காதலியின் உயிர்த் தோழி ஒருத்தி இருந்தாள்; தலைவியோடு பழகி விளையாடும் தோழி மார் பலர் இருந்தாலும் அவளுடைய உள்ளத்தைப்போல நெருங்கி ஒன்று பட்டுப் பழகும் நிலை அந்தத் தோழிக்குத் தான் இருந்தது. இதைத் தலைவன் குறிப்பாகத் தெரிந்து கொண்டான். இனிமேல் அவள் துணையைக் கொண்டு அடிக்கடி தன் காதலியைச் சந்திக்கலாம் என்று எண்ணி அவளைத் தனியே அணுகினன்.

மிகவும் பணிவுடையவனகித் தனக்குத் தலைவியின் பால் உள்ள காதலைப் புலப்படுத்தினன். தோழி முதலில் அவன் வார்த்தைகளைக் கேளாமற் புறக்கணித்தும், அப்பால் பல காரணம் கூறி அவனை மறுத்தும் வந்தாள். அவன் மேலும் மேலும் இரந்து நிற்கவே, அவனுடைய உண்மையான காதலையும், அதன் வலிமையையும் உணர்ந்து கொண்டாள். அன்றியும், தலைவன் பேச்சி லிருந்து அவனுக்கும் தலைவிக்கும் முன்பே பழக்கம் இருப்பதும் அவளுக்குத் தெரிய வந்தது. இறுதியில், தலைவியின் அன்பை அவன் பெறும்படி செய்வதாகக் கூறி விட்டுத் தலைவியை அடைந்தாள். نی