பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழி : நினைக்க நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது!

தலைவி : என்ன தோழி? எதை இப்பொழுது நினைத் தாய்?

எது பரிதாபமாக இருக்கிறது?

தோழி : எதற்கும் அஞ்சாத நெஞ்சுடைய வீரனென்று அவனைப் பார்த்தால் தெரிகிறது. மலையைப் போன்ற தோள்கள்; யானைத் துதிக்கையைப் போன்ற கைகள்.

தலைவி : இதோ பார். இந்தத் தேனிருல் எவ்வளவு பெரிதாக இருக்கிறது! நெடுநாட்களாக மலரிலிருந்து ஈட்டிய தேனை வண்டுகள் சேமித்து வைத்திருக் கின்றன.

தலைவி தான் கூறுவதைக் காதில் வாங்கவில்லை என் பதைத் தோழி உணர்ந்தாள். தலைவிக்கோ தன் தோழி தன் காதலனைச் சந்தித்திருக்கிருள் என்று தெரிந்து விட்டது. ஆனாலும் அவனைத் தனக்குத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளக் கூடாது என்று எண்ணிளுள். ஆகவே வேறு எதையோ பேசிளுள்.

தோழி : அவன் நிலையை உணர உணர என் உள்ளம் இரங்குகிறது. ஒரு களிறு தன் பிடியின் அருகே நின்றது. அதைக் கண்டு பொ.மூச்சு விட்டபடியே அவன் நின்ருன்.

தலைவி : என்ன தோழி, நம்மோடு தொடர்பில்லாத செய்திகளையெல்லாம் எதற்காக இங்கே சொல் கிருய்?

தோழி , அவன் உன்னிடத்தில் இணையற்ற காதல் பூண் டிருக்கிருன். நம்மை நயந்து இநதப் பகுதிகளில் சுற்றிக் கொண்டே உலவுகிருன்.