பக்கம்:மனோகரா.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) மனோஹரன் 149

Quer :

IᎠ ?

ரா :

அறியாமலென்ன? இதோ நிற்பவர் வீரகேசரி, அவர் அருகில் நிற்பவர் ஜெயப்பிரதாபர், இவர் சுகுண சேகரர், என் பெயர் மேதாநிதி,

தாங்களெல்லோரும் எந்தத் தேசம் ?

சேரதேசத்திற்குச் சமீபத்திலிருப்பவர்கள்.

மஹாராஜா, நாங்கள் ஒரு முக்கியமான காரணமாய்ப் போக வேண்டும், சீக்கிரம் விடையளியும்,

வீரகேசரி தமது புஜ பல பராக்கிரமத்தினாலேயே நான் இப்பொழுது பிழைத் திருப்பது; இடங்கள் நால் வருடைய வல்லமையினாலேயே நான் ஜயங்கொண்டது நீங்களில்லாவிடின், நானிறக்க என் படைகளெல்லாம் முறியடிக்கப்பட்டு என் தேசத்தையெல்லாம் பகைவர் கைப்பற்றியிருப்பார்கள். அப்படியிருக்க, எனக்கு இவ் வளவு உபகாரம் செய்த தம்மையும்தேமது தோழர்களை யும் நான் தக்க மரியாதை செய்யாது அனுப்பி விடுவேனாயின் நான் நன்றியற்றவனாவேன், உலகத்

தோரெல்லாம் என்னைப் பழிப்பார்கள். என துயிரை

யும், சைனியங்களையும் ராஜ்யத்தையுங் காப்பாற்றிய தாங்கள் எனது சபைக்கு வந்து, எதுவேண்டுமோ அதைப் பெற்றே செல்லவேண்டும். அதற்குமுன் உங்களுக்கு நான் ஒரு காலும் விடையளியேன்.

எங்களுக்கு வேண்டியதொன்றுமில்லை

அப்படியல்ல, எதை வேண்டுமென்றாலும் கேளுங்கள் தருகிறேன். என் ராஜ்யமுழுமையும் கேட்டபோதிலும் தரச் சித்தமாயிருக்கிறேன்.

எ ருக்கு து ராஜ் பம் வேண்டி பதில்லை.

ஆயின் வேறு எதையாவது பெற்றுச் செல்ல வேண்டும். நீங்கள் எதைக் கேட்டபோதிலும் தரச் சித்தமாயிருக் கிறேன். எ ன் வேண்டுகோளை மறுக்கலாகாது.என்ன சொல்கிறீர்கள்? நாளைத்தினம் என் சபைக்கு வருகிறீர்களா தயவு செய்து ? மஹாராஜா, எங்களிஷ்ட மொன்றுமில்லை; இவர்தான் எங்கள் தலைவர். இவர் சொற்படி நாங்கள் நடக்கச் சித்தமாயிருக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/158&oldid=613608" இலிருந்து மீள்விக்கப்பட்டது