பக்கம்:மனோகரா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) மனோஹரன் 7.

பதி :

பத் :

நீலவேனி, உன்னை நான் பார்க்கவில்லை. எப்படியிருந்த போதிலும் நான் பெண்பாலல்லவேர்: அதிவீரசேர மஹா ராஜனுடைய பெண்ணாயிருந்தபோதிலும் புத்திர வாத் சல்யம் போகுமோ? இதைக்கடந்தவர் யார்?

அப்படியிருக்கும்பொழுது இளவரசரைப் பதினெட்டாம். வயதில் பேய்களும் அஞ்சும்படியான ரணக்களத்திற்கு அனுப்பலாமோ?

நான் என்னசெய்வது?

ஆம், நீர் என்னசெய்வீர் பாவம்; மஹாராஜாவை யல்லவோகேட்கவேண்டும், என்ன அம்மணி, அவருக்குத் தன் புத்திரனென்று கிஞ்சித்தாயினும் பட்சமிலையோ? ஒரு வேளை யுத்தத்திற்குச் சென்று மாளட்டுமென்றே இப்படியனுப்பினாரோ என்னவோ?

நீவவேணி மஹாராஜாவைப்பற்றி இவ்வாறு என்னிடம் கூற வேண்டியதில்லையென்று உனக்கு எத்தனை முறை உரைத்திருக்கிறேன்; மஹாராஜா மனோஹரன் வெற்றி பெற்று கீர்த்தியடையவேண்டுமெனக் கருதிய்ே அனுப்பி யிருக்கிறார். இதற்குச் சந்தேகமில்லை. இப்பதினாறு வருடங்களாக நான் அவரைப் பாராதிருந்தபோதிலும் மனோஹரனிடத்தில் மாத்திரம் அவருக்கு உள்ளன்பிருக் கிறதென்பதற்குத் தடையில்லை.

ஆ! அப்படியா:

மறுபடியும் சத்தியசீலர் வருகிறார்

சத்தியசீலரே! நான் உம்மை மனோஹரனுக்குப் படைத் துணையாக அனுப்பியிருக்க என்ன வந்துவிட்டீர்? மனோஹரன் இன்னும் புறப்படவில்லையோ?

அம்மணி, இளவரசர் புறப்பட்டுவிட்டார். நான் எவ்வளவு கூறியும் செவியிலேற்றுக்கொள்ளாது, இங்குச் சென்று தான் வருமளவும் தமக்குத் தேறுதல் சொல்லிக்கொண்டி ருக்கும்படி ஆணையிட்டனுப்பினார் என்னை; அம்மா, அவர் ஒன்று கூறினால் அதைத் தட்டுவது யார்?

ஆம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/16&oldid=613261" இலிருந்து மீள்விக்கப்பட்டது