உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 மனோ : நாடகத்தில் கூட இதுமாதிரி ஒரு வாள்.ஆமாம் பார்த்தேன்..... மாளிகையின் வேறு பகுதியில்! சத்யசீலர்: நாகத்திலே வந்த வாள், போலி வாள்! நான் சொல்வது போர் வாள்! மனோகரனின் பாட்ட னார் - மகாராணியின் தந்தை - அதிவீர சேரருடையது அந்த வாள்! ராஜப்ரியன்: அதிவீர சேரன் நாடகப் பெயர்... அதி தீர சூரர். உம்...அப்புறம் ?..... சத்யசிலர்: பாண்டியன் முத்துவிஜயன்.. எதிர்பாராத முறையில் மனோகரனின் பாட்டனாரை ஜெயித்து ரத்ன சிம்மாசனத்தையும் கைப்பற்றினான்... போர் முனையில் காயப்பட்ட பாட்டனார் சாகும்போது முத்து விஜய ளைப் பழி வாங்கும் பொறுப்பை குழந்தை மனோகா னிடம் ஒப்புளித்து உயிர் நீத்தார்..... தாத்தாவின் விருப்பத்தை மனோகரனின் தடந்தோள் கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்.

பத்மாவதி: ஆமாம் மனோகரா! முத்து விஜய பாண்டியன் முறியடிக்கப்பட வேண்டும். செத்துப்போன தாத்தா வின் சமாதியின் மீது வெற்றி மலர்கள் தூவவேண்டும். நம்முடைய பரம்பரை ரத்ன சிம்மாசனம் விடுதலை பெற வேண்டும். மனோ : விடை கொடுங்கள். வெற்றி மழை பொழிய வைக்கிறேன். வீணன் முத்து விஜயனின் விலா எலும்பை நொறுக்குகிறேன். சூது செய்து பிறர் நாட்டை சுருட்டிக் கொள்பவர் கள் இப்படித்தான் சுருண்டு போவார்கள் என்பதற்கு அவனை உதாரணமாகக் காட்டுகிறேன். பத்: செல்வா! சிந்தை குளிர்ந்ததடா கண்ணே...நம் பரம்பரைக் கேற்பட்ட களங்கத்தை மீதான் கழுவ வேண்டும்......