உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வச: 20 உங்கள் காலடியில் கிடைக்கும் என் இன்ப வாழ்வுக்கு தீ மூட்டத் திட்டம் போட்டு விட்டார்கள்! அர : திட்டம் ? யார்? வச: மகாராணி தான்! அர: யார்.. பத்மாவதியா?... கேசரியின் குரல்: இல்லை...பச்சைப் புளுகு?... பாராளும் வேந்தே...பாகு மொழியில் பலியாகாதே! வச: பாருங்கள் ஸ்வாமி பாருங்கள். நான் கேள்விப் பட்டது உண்மைதான்.... மகாராணி மந்திரஜாலம் வேறு நடத்துகிறார்களாம்..... உங்களிடமிருந்து என் னைப் பிரிக்க அர: கவனிக்க வேண்டியது தான்! (காவலரிடம்) யார் இங்கு பேசியது என்று தேடிப் பாருங்கள். (சிப்பாய்கள் சப்தம் வந்த திசை நோக்கி ஓடுகிறார்கள்) மனோகரன்: புரையோடி விட்ட புண்ணுக்கு புனுகுப்பூச்சு. பொல்லாங்குக்காரியின் போலி வேடத்தைப் பொசுக்க பொறுமை போதுமம்மா பொறுத்ததெல்லாம், உத்திரவு கொடுங்கள். உருத் தெரியாமல் ஆக்கு கிறேன் அந்த ஊர் கெடுப்பவளை? பத்மா : மனோகரா ! இரு...... (அங்குள்ள பெட்டியிலுள்ள மனோகரனிடம் கொடுக்க) வாளை மனோ: அம்மா! ஒரே வீச்சு ! வேஷக்காரி வசந்தா தொலைந்தாள்! யத்: பொறு செல்வா... அதைவிட ஒரு புனிதமான காரியத்தில் உன்னை ஈடுபடச் சொல்கிறேன். மனோ: என்னம்மா அது? பத்மா: இந்த வாள் ஏது தெரியுமா?