39 வசந்: உம் - அதானே பாத்தேன்- எல்லாரும் பைத்யம். பைத்யங்கிறாங்களே- விகடா! கேட்டியா- எனக்கு பைத்யம் கிடையாது! தீராத வியாதி!
குகை
ஒண்ணும் பெரியவர் மருந்து முறை கண்டு பிடிப் பதில் ஈடுபட்டிருக்கிறார். பெரியவர்: இந்த அருப மருந்து தீர்வதற்குள் வெற்றி நிச்சயம்..... கேசரிவர்மன்: அருப மருந்து.. குறைந்து விட்டதே. இன்னும் கொஞ்சம்... பெரியவர்: தேவையில்லை... இதோ இன்றைக்கே சாகாத சஞ்சீவி...கண்டு பிடித்து விடுவேன். கேசரிவர்மன்: (வசந்தசேனை சிலையைக் காட்டி} செந்த சேனை... அவள் இருதயத்தை எடுத்துப் பிழிந்து இந்த சிலைக்கு சிகப்பு வர்ணம் பூசவேண்டும்.அவள் கண் களை த்திக் [ஒரு வெடிக் சப்தம்..... குருநாதர் புகை சூழ்ந்து கீழே விழுகிறார். தூக் கொண்டு வெளியே வருகிறான்... குரு நாதர் உயிர் ஊசலாடுகிறது...) பெரியவர் : கேசரி வர்மா...என் கடைசி...வாழ்த்து அவசரப்படாதே... உன் லட்சியத்திற்கு...மனோகரனை துணையாக்கிக் கொள்!... நான்... நான் சாகிறார். கேசரிவர்மன்: ஓய்வின்றி உழைத்தீர், உலகிற்கு ஒரு அதிசயத்தைச் சொல்ல ! அருப மருந்து. அந்த முறையைக்கூட எனக்குக் காட்ட வில்லையே. ஸ்வாமி! புதுமையைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், மற்ற வருக்கு வெளியிடாமலே மறைந்து விட்டார்கள்... அந்த வழியில் நீங்களும் நடந்து விட்டீர்கள்...இந்த நாட்டுக்கே இப்படி ஒரு சாபமா?