38 பத்மாவதி அறை : மனோகரன்: அம்மா! பத்மாவதி: மனோகரா!... என்ன நடந்தது? மனோ: என்ன நடக்க வேண்டுமென்று எண்ணி என் கைகளைக் கட்டிப் போட்டீர்களோ அது நடந்தது. அம்மா! இப்படி பயங்கரமாகக் கட்டளை இடுவீர்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் முத்து விஜயனைக் கொன்று - படை வீரர் பலரின் உயிரைத் தந்து அந்தப் பாதகி அமர்வதற்கு சிம்மாசனத்தைக் கொண்டுவந்திருக்க மாட்டேன். நீங்கள் அமர வேண்டிய சிம்மாசனத்தில் அவளா? அதற்காக ஒரு படையெடுப்பா? இதை பத்மாவதி: படையெடுப்பால் வந்த பயன்தானே இந்தப் பைங்கிளி (விஜயாவைக் காட்டுகிறாள்) நினைத்து அதை மறந்துவிடு மனோகரா! (விஜயாவிடம்) விஜ்யா உன் கணவனை சாந்தப் படுத்து! மாளிகையின் ஒரு பகுதி.
வைத்யன் வசந்தனுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறான்..... வைத்யன்: உம்... சாப்பிடணும் வசந்தன்: ஏய் - வைத்யா ! இந்து மருந்துக்குப் பெயர் என்ன? வைத்யன் : சுயபுத்தி சூரணம் வசந்தன்; இது எதிலே தயாரிக்கப்பட்டது- வைத்யன்: திராட்சை, தேன், கற்கண்டு, சக்கரை இவை களால் தயாரிக்கப்பட்டது. வசந்தன்: அப்ப கசக்குமோ... வைத்: "ஹூம்... கொஞ்சம் புளிக்கும், ஏன்னா ரெண்டு மிளகாயும் சேர்த்திருக்கேன். வச: வைத்யா !...எனக்கு என்னா வியாதிடா வைத்: தீராத வியாதி