49 மனே: கட்டளையா இது? கரைகாண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வரமும் பூட்டி மகிழ்ந்து,கண்ணே! முத்தே! தமிழ்ப் பண்ணே! என் றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டி விலே.. சந்தனத் தொட்டிலிலே ! வீரனே! என் விழி நிறைந்தவனே தீரர் வழி வந்தவனே! என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ... அவனை அந்த மனோ கரனை சங்கிலியால் பிணைத்து சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே? சபையோர் : த்ச...த்ச... அரசர் : நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி, தந்தை யின் முன் தனயனல்ல இப்போது! மனோ : குற்றவாளி! ஹும் யாருக்கு என்ன தீங்கிழைத் தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல. பிரஜைகளில் ஒருவனாகவே கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா ? நாட்டைக் கவிழ்க்கும் குள்ள நரி வேலை தான் செய்தேனா? ... குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம். இதோ... அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மா வீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிரிதிகள்! இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்.. என்ன குற்றம் செய்தேன்? . சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும். அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது. மனோ : சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத் தகராறு கொலு மண்டபத்துக்கு வரும். விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முத லாக சந்திக்கிறது மகாராஜா!
பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/50
Appearance