52 கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே ; என் தாய் அன்பின் பிறப்பிடம் - அறநெறியின் இருப்பிடம் - கருணை வடிவம் கற்பின் - திருவுருவம்- மாசற்ற மாணிக்கம் - மாற்றுக குறையாத் தங்கம்--அவர்களை அவதூறு கூறிய உமது அங்கங்களை பிளந்தெறிவேன்! இந்த துரோகப் பேச்சுக்கு உம்மைத் தூண்டிவிட்ட துர்த்தையின் உடலைத் துண்டாடுவேன். துணி விருந்தால் - தோளிலே வலுவிருந்தால் எடுத்துக் கொள்ளும் உமது வாளை- தடுத்துக் கொள்ளும் உமது சாவை தைர்யமில்லாவிட்டால் -தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகி விட்டிருந்தால் ஓடிவிடும் இதைவிட்டு! புறமுதுகு காட்டி ஓடும்! புறநானூற்றின் பெருமையை மூடவந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே ! கால் பிடரியில் இடிபட ஓடும்... ஓடும். ஓடும் ஓலமிட்டு ஓடும் ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும் ஏன் அவமானமாயிருக் கிறதா? என் அள்ளையைத் தூஷித்த சின்னஞ்சிறு புழுே ஏன் சுலையாக மாறிவிட்டீர்? ஏ. ராஜவிக்ரகமே : பழி வாங்கும் பக்தன் பூஜைசெயய வந்திருக்கிறான்! அப் படியே நில்லும் ! அசையாமல் நில்லும் ! இந்த சித்து வேலைக்காரியின் சத்தத்தை மொண்டு உமக்கு அபி ஷேகம் செய்விக்கிறேன். இந்த நாசகாரியின் நரம்பு களால் உமக்கு மாலை சூட்டுகிறேன், முல்லைச் சிரிப்டென புகழ்வீரே, மோக போதையில்! அந்தப் பல்லை யெடுத்து உம்மை அர்ச்சனை செய்கிறேன்! பாவி... பார்... பத்தினியை இகழ்ந்த படுபாவி பார்! நீயும் உன் பஞ்சணை ராணியும் படும் பாட்டைப் பார்! பத்மாவதி: [வந்துகொண்டே] விடு வாளை! ஙனோ: யார், நீ ?. (திகைத்தபடி) அம்மா!அம்மா! நீங்கள் எங்கே அம்மா வந்தீர்கள்? கயமைத்தனம் ஆட்சி புரியும் இந்த இடத்திலே உங்கள் தூய்மையான காலடிகள் பட டாதே அம்மா' பத்: மகேரா !
பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/53
Appearance