பக்கம்:மனோன்மணீயம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியர் முகவுரை 'மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணஞ் செய்யப் பெற்றே அறை கடல் வரைப்பிற் பாடை யனைத்தும் வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை உண்ணினைந் தேத்தல் செய்வாம்' 'இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே தழிஇனார் என்றாலிவ், விரு மொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ...' 'கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ ' என்றெடுத்த ஆன்றோர் வசனங்கள் உபசாரமல்ல, உண் மையே யென்பது பரத கண்டம் என்னும் இந்திய தேசத்தி லுள்ள பற்பல பாஷைகளைச் சற்றேனும் ஆராய்ந்து ஒப்பிட்டு நோக்கும் யாவர்க்கும் திண் ணிதிற் றுணியத் தக்கதே. பழமையிலும், இலக்கண நுண்மையிலும், இலக்கிய விரிவிலும் சிறப்புக்களிலும் மற்றக் கண்டங் களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ் மொழி சிறிதும் தலை கவிழ்க்கும் தன்மையதன்று. இவ் வண்ணம் எவ்விதத்திலும் பெருமை சான்ற இத் தமிழ் மொழி பற்பல காரணச் செறிவால் சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க மாசடைந்து நிலை தளர்ந்து, நேற்றுதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தி யற்று நிற்கின்றது. இக்குறைவு நீங்கத் தங்கள் தங்களுக் கியன்றவழி முயற்சிப்பது தங்களை மேம்படுத்தும் தமிழ் மொழியைத் தம்மொழியாக வழங்கும் தமிழர் யாவரும் தலைக்கொள்ள வேண்டிய தவறாக் கடன் பாடன்றோ !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/10&oldid=856066" இலிருந்து மீள்விக்கப்பட்டது