பக்கம்:மனோன்மணீயம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை வரலாறு * வெளியிட்டார். தமிழ் இலக்கியம், புலவர் தம் கால ஆராய்ச்சிக்குப் பேராசிரியர்தம் இந்தக் கால நிருணயம் இன்றும் பெரிதும் துணை புரியக் காணலாம். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்தவக் கல்லூரி இதழில் வெளியிட்டார். 1878ஆம் ஆண்டில் தாயாரையும், 1886ஆம் ஆண்டில் தந்தையாரையும் இழந்த இவருக்குக் கை கொடுத்தது தத்துவ நூல்களேயாகும். இவருடைய திருமகனார் திரு. நடராசப் பிள்ளை பின்னாளில் கேரள அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார். தாம் வாழ்ந்த மைைசத் தோட்டத்திற்குப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையன்ர்கள் தம் ஆசிரியர் ஹார்வி பெயரையே இட்டமையும், தம் மனோன்மணிய நூலினை அவருக்கு உரிமையாக்கிய செயலும் இவருடைய நன்றி மறவா நற்பண்பினையும், ஆசிரியர்பால் இவர் கொண் டிருந்த அன்பின் பெருக்கினையும் மரியாதையினையும் புலப்படுத்தும். == நாடகத் துறைக்கு நல்ல தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தம் மனோன்மணிய நாடக நூலினால் ஈடு செய்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் சிறு வயதிலேயே-தமது நாற்பத்திரண்டாவது வயதிலேயே-- (26-4-1897) மறைந்தது தமிழுக்கு-சிறப்பாக நாடகத் தமிழ்த் துறைக்கு ஒரு பேரிழப்பே எனலாம். ஆயினும் அவர் நூல் என்றென்றும் அவர்தம் பெயரினை நினை வுறுத்திக் கொண்டு நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/9&oldid=856853" இலிருந்து மீள்விக்கப்பட்டது