பக்கம்:மனோன்மணீயம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம். அங்கம் மூன்றாம் களம் 113. என்றுரைத்த இனியமொழி யிருசெவியுங் குளிர, ஏதோதன் பழநினைவும் எழவிருகண் பணித்து' நன்றெனவே தவ வடிவாய் நின்றமகன் வணங்கா நன்முனிவன் செல்வழியே நடந்த தனி தொடர்ந்தான். இந்திரநற் சாலவித்தை யெதுவோவொன் றிழைக்க இட்டதிரை யெனத்திசைக ளெட்டுமிருள் விரிய அந்தரத்தே கண்சிமிட்டிச் சுந்தரதா ர கைகள் அரியரக சியந்தமக்குள் ளறைந்துநகை புரிய, (7) என்புருகப் பிணைந்த அன்றில் இணைசிறிது பிரிய ஏங்கியுயிர் விடுப்பவர்போ லிடையிடையே கூவ, அன்புநிலை யாரறிவ ரென்பனபோல் மரங்கள் அலர்மலர்க்கண் நீரருவி அகமுடைந்து தாவ: (8) விந்தைநடப் பதுதெரிக்க விளிப்பவரில் வாவல் விரைந்தலைய மின்மினியும் விளக்கொடுபின் ஆட: இந்தவகை அந்தியை முன் ஏவி.இர வென்னும் இறைவியும்வந் திறுத்தனள்மற் றிளைஞருயிர் வாட (9). பொறியரவின் கடிகையுறு பொலன்மணியி னொளியும் பொலிமதத்தின் கறையடி’யின் புலைமருப்பி னொளியும் அறிவரிய சின.உழுவை' அழல்விழியி னொளியும் அலைதிலையஷ் அடவியிடை யயல் காட்டு மொளியே (10) .பிரிவரிய ஊசிவழி பின்தொடரும் நூல்போல் பேரயர்வின் மனமிறந்து பின்தொடரும் மைந்தன், அரியபுத ரிடைய கற்றி அன்பொடழைத் தேகும் அம்முனிவ னடியின்றி அயலொன்றும் அறியான். (11) ஒருங்கார நிறைமுளரின் உழையொதுக்கி நுழைந்தும், உயர்மலையின் குகை குதித்தும் ஓங்கார ஒலியே தருங்கான நதி' பலவுந் தாண்டி அவ ரடைந்தார் சார்பிலர்க்குத் தனித்துணையாந் தவமுனிவ னிடமே. நேயமுடனெவ்வழியும் நேர்ந்தவரைத் தன்நுண் நிறுவுதலை வளைத் தழைக்கு நெருப்பொன்றும் அன்றி வாயிலெனப் பூட்டென்ன மதிலென்ன வழங்கும் மனையென் னும் பெயர்க்குரிய மரபொன்று மின்றி. (13. 1. _ நீர்த்துளி த்து 2. புள்ளியையுடைய பாம்பு 3. யானை 4. புலி 5. முட்க்ாடு 6. காட்டாறு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/115&oldid=856099" இலிருந்து மீள்விக்கப்பட்டது