பக்கம்:மனோன்மணீயம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் : மூன்றாம் களம் 115. வதுனது கவலை? உளந் திருப்பதெனக் கோதாய் இழந்தனையோ அரும்பொருளை? இழந்தனரோ நண்பர்? காதல்கொள நீவிழைந்த மாதுபெருஞ் சூதாய்க் கைவிடுத்துக் கழன்றனளோ? மெய்விடுத்துக் கழறாய்(22) ஐயோஇவ் வையகத்தி லமைந்தசுக மனைத்தும் அழலாலிங் கெழுந்தடங்கு நிழலாக நினையாய் . கையாரும் பொருளென் னக் கருதி மணல் வகையைக் காப்பதெலா மிலவுகிளி காத்தலினும் வறிதே (23) நண்பருற வினர்கள் நமை நாடியுற வாடல் நறுநெயுறு குடத்தெறும்பு நண்னலென எண்ணாய் ! பெண்களாகக் காதலெலாம் பேசுமுயற் கொம்பே ! பெருங்கபட மிடுகலனோ பிறங்குமவ ருடலம்! " (24) எரியுமுளம் நொந்தடிக வரிசைத் தவசை யுட்கொண்டு ஏதில: ரீைள் கனவிழித் தெழுந்தவன் போல் விழித்து விரிவெயிலில் விளக்கொளியும் மின்னொளியிற் கண்ணும் வெளிப்பட்ட கள்வனும்போல் வெட்கிமுகம் வெளுத்தான். (25) இசைத்தவசைச் செயலுணர எண்ணிமுகம் நோக்கி இருந்தயதி'யிக்குறிகண் டிறும்பூதுள் ளெய்தி விசைத்தியங்கு மெரியெழுப்பி மீண்டுமவன் நோக்க வேஷரக சியங்களெல்லாம் வெட்டவெளி யான (26) நின் மலவி பூதியுள்ளே பொன் மயமெய் தோன்றி நீறுபடி நெருப்பெனவே நில வியொளி விரிக்கும் உண்மைதிகழ் குருவிழிக்கு ளுட்கூசி யொடுங்கும் உண்மைபெறு கண்ணினையும் பெண்மையுருத் தெரிக்கும் கூகமுக நாணமொடு கோணி யெழில் வீச குழற்பாரஞ் சரிந்துசடைக் கோலமஃ தொழிக்கும் வீசுலையின் மூக்கெனவே விம்மியவெய் துயிர்ப்பு வீங்கவெழு கொங்கைபுனை வேடமுழு தழிக்கும். (28) இவ்விதந்தன் மெய் விளங்க இருந்தமக வெளழுந்தே யிருடிபதந் தலைவணங்கி யிம்மொழியங் கியம்பும்; 'தெய்வமொடு நீ வசிக்குந் திருக்கோயில் புகுந்த தீவினையேன் செய்த பிழை செமித்தருள் வைமுனியே!(29) 1. வறிஞன் 2. முனிவர் 3. வியப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/117&oldid=856103" இலிருந்து மீள்விக்கப்பட்டது