பக்கம்:மனோன்மணீயம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம்: மூன்றாம் களம் 117 ஆயத்தார் கூடியெனை ஆயவுந்தான் ஒட்டார் அகல்வேல்ை யோ எறியும் அகோராத்திரங் கெடுத்து: நீயைத்தா னேயுமிழுஞ் சிறந்த கலை மதியும்: திரிந்துலவுங் காலு முயிர் தின்னு நம னென்ன. (38).” அண்டவரைக் கேட்டவரைக் காசினியில் தேடிக் கண்டிடச் சென் றேயலைந்த கட்டமெனைத் தென்க? _ண்டெனத்தம் யூகநெறி உரைப்பவரே அல்லால் உள்ளபடி கண்ட்றிந்தோர் ஒருவரையும் காணேன் (39) _ண்டெனிலோ கண்டிடுவன்; இல்லையெனில் ஒல்லை உயிர்விடுத லே நலமென்று று ன்னியுளந் தேறி கண்துயிலும் இல் லிடந்தீ கதுவ வெளி யோடும் கணக்காஇவ் வேடமொடு கரந்து புறப் பட்டேன். (40) நீர்த்தகுலம் மூர்த்தி தலம் பார்த்துடலம் சலித்தேன். திருக்கறுபற் குருக்கள் மடம் திரிந்துமணம் அலுத்தேன் வார்த்தைகத்தும் வாதியர்தம் மன்றனைத்தும் வறிய மறுத்துறங்கும் யோகியர்போய் வாழ்குகைபாழேயும் (41) . மான்றவாக் கலையினமே! வாழ் பிடிவிட் டகலா மதம்பெருகு மாகுலமே! வன் பிகமே! சுகமே! நான் மறவர் நாதனையேஞ் ஞான்றுமறி விரோ? நவில்வீரெனப் பின் தொடர்ந்து நாளனந்தங் கழித்தேன். இவ்விடமும் அவ்விடமும் எவ்விடமும் ஒடி இதுவரையும் தேடியுமென் அதிபரைக கண் டிலேனே. என்விடம் யான் நண்ணவி னி? எவ்விடம்யான் உண்ண? இக்காயம்! இனியெனக்கு மிக்க அரு வருப்பே. (43) ஐயோ வென் உள்ள நிலை அறியாரோ இனியும்? ஆசைகொண்டு நானலைந்த தத்தனையும் பொய்யோ? பொய்யேதான் ஆயினும் புனிதர வர் தந்த போதகமலால் வேறெனக்கும் ஒதுமறி வுளதோ? (44) நல்லார் அருளுடையரென நம்பி இதுவரையும் நானுழைப்ப தறிவரெனில் ஏனெதிர்வந் திலரோ? இல்லையெனில் என்னளவும் இவ்வுலகம் அனைத்தும் எந்நலமும் கொல்லவென எடுத்த சுடு காடே. (45, என்னுடைய உயிர்த்துணைவர்-எண்ணிய அருளில் ஏதோசிற் சாயையுன திடத்திருத்தல் கண்டு 1. கடல் 2. இரவுபகல் 3. பற்ற 4. உடம்பு 5. அறிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/119&oldid=856106" இலிருந்து மீள்விக்கப்பட்டது