பக்கம்:மனோன்மணீயம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" I 18 மனோன் மணியம் மன்னுதவ மாமுனிவ! மனத்துயரம் உன்பால் வகுத்தாறி னேன் சிறிது மறுசாட்சி யில்லை. (46) இனியிருந்து பெரும்பயனென்? இவ் வழலே கதி"யென்று எரியுமழல் எதிரே நின் றிசைத்தமொழி முழுதும் முனிசெவியுற் புகுமுனமே மூதுருவம் விளக்கி முகமலர்ந்தங் கவளெதிரே முந்திமொழி குளறி! (47) *சிவகாமி யானுனது சிதம்பரனே” என்னச் செப்புமுனம் இருவருமற் றோருருவம் ஆனார்! எவர்தாமுன் அணைந்தனரென் றிதுகாறும் அறியோம். இருவருமொன் றாயின ரென் றேயறையும் சுருதி. (48) பரிந்து வந்து பார்வதியும் பாரதியும் கஞ்சப் பார்க்கவியும்" யார்க்கிதுபோல் வாய்க்குமென வாழ்த்த, அருந்ததியும் அம்ம! இஃது அருங்கதியென் றஞ்ச ஆர்வமுல கார்கவென ஆரணங்கள் ஆர்த்த. (49) ஆழிபுடை குழுலகம் யாவுநல மேவ! அறத்துறை புகுந்துயிர்கள் அன்புவெளம் மூழ்க! பாழிலலை வேனுடைய பந்தனைகள்’ சிந்த பரிந்தருள் சுரந்த மை நிரந்தரமும் வாழ்க! (50) (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) மனோன : - வாணி! மங்காய்! பாடிய பாட்டும், வீணையின் இசையும் விளங்குநின் குரலும் 40. தேனினும் இனியவாய்ச் சேர்ந்தொருவழி படர்ந்து 4 ஊனையும் உயிரையும் உருக்கும் ஆ! ஆ! (இருவரும் சற்று, மெளனமாயிருக்க) உனது.கா தலனெங் குளனோ? உணர்வைகொல்? வாணி : எனது சிந்தையில் இருந்தனர்; மாறார், மனோன் : ஆயினும் வெளியில்? வாணி : அறியேன். அம்ம ! மனோன் : 45. போயின இடம்நீ அறிவாய்? - 1. தடுமாறி 2. தாமரை மலரில் உறையும் இலக்குமி 3. கட்டுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/120&oldid=856110" இலிருந்து மீள்விக்கப்பட்டது