பக்கம்:மனோன்மணீயம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - மனோன்மணியம் பின் சந்ததியார் பேணுவதற்கும் அதுவேஜ்யொழிய வேறு: குறியுமில்லை. ஆனதினால் எக்காலத்திலும் எவ்விஷயத்தி லும் பூர்வீகர்களால் தங்களுக்குச் சிந்தித்திப்பவற்றை ஒவ் வொரு தலைமுறையாரும் பாதுகாப்பதுமன்றித் தங்களாற் கூடிய அளவும் அபிவிருத்தி பண்ணவும் கடமை பூண்டவர் களாகின்றார்கள். பூர்வார்ஜிதம் மிகவும் பெரியதாயிருக் கின்றதே! நம் முயற்சியால் எத்தனைதான் சம்பாதிப்பினும் நமது பூர்வார்ஜிதத்தின் முன் அஃது ஒரு பொருளாகத் தோற்றுமா என மனந்தளர்ந்து கைசோர்வார்க்கு அவரி பூர்வார்ஜிதப் பெருமைக் கேடு விளைவிப்பதாகவன்றோ முடியும்? அந்தோ! இக் கேட்டிற்கோ நம் முன்னோ நடிக் காக வருந்தி யுழைத்துப் பொருளீட்டி வைக்கின்றார்கன்! பிதிர்களால் நிற்கும் அம் முன்னோர் இவ் விபரித விளைவைக் கண்டால் நம்மை எங்கனம் வாழ்த்துவரி! இக் அறிய உண்மை செல்வப் பொருளுக்கன்றிக் கல்விப் பொரு ளுக்கும் ஒரு குடும்பத்துள் வந்த ஒருவனுக்கன்றி ஒரு தேசத்திற் பிறந்த ஒவ்வொரு தலைமுறையாருக்கும் ஒன்று போலவே பொருத்தமுடைதாதலால்,

  • குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துதும்" என்னும் திருக்குறளை நம்பி முன்னோர் யாதேனும் ஒரு வழியில் அபரிமிதமான சிறப்படைந்தாராயின் நாமும் அவர் போலவே இயன்ற அளவும் முயன்று பெருமை பெறக் கருதுவதன்றோ அம்முன்னோர்க்குரிய மக்கன் நாமென முன்னிற்றற்கேற்ற முறைமை ! '. தீங்கிரும் பீன்ற திரள்கால் உளையலறி - தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு-ஒங்கும் உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும் பேராண்மை யில்லாக் கடை." ஆதலால் அருமையாகிய பூருவ துனல்களைப் பாது காத்துப் பயின்று வருதலாகிய முதற் கடமையோடு அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/12&oldid=856108" இலிருந்து மீள்விக்கப்பட்டது