பக்கம்:மனோன்மணீயம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 1 is _வழியே முயன்று அந்த அந்தக் காலநிலைக் கேற்றவாறே புதுநூல்களை இயற்ற முயலுதல் தமிழ் நாடென்னும் உயர் குடியிற் பிறக்கும் ஒவ்வொரு தலைமுறையாருக்கும் உரித் தான இரண்டாம் கடமையாய் ஏற்படுகின்றது. மேற்கூறிய இரண்டாம் கடமையைச் சிரமேற் கொண்டு தமிழோர் என்னும்பெரிய குடும்பத்துள்ளே தற்காலத்துள்ள தலைமுறையாருட் கல்வி கேள்வி அறிவு முதலிய யாவற்றுள்ளும் கனிஷ்டனாகிய சிறியேன், 'இசையா தெனினும் இயற்றியோ ராற்றால் அசையாது நிற்பதாம் ஆண்மை’ என்னும் முதுமொழியைக் கடைப்பிடித்து நவீனமான பல வழிகளுக்கும் என் சிறுமதிக் கேற்றதோர் சிறுவழியில் சில காலம் முயன்று வடமொழி முதலிய பாஷைகளிலுள்ன நாடக ரீதியைப் பின்றொடர்ந்து இயற்றிய மனோன் மணியம்' என்னும் இந்நாடகம் பூர்வீக இலக்கியங்களுடன் சற்றேனும் உவமிக்க இயையாதெனினும் ஆஞ்சனேயராதி வாணர வீரர்கள் சேதுபற்தனஞ் செய்யுங் காலத்தில் கடனி சிலே தோய்ந்து மணலிற் புரண்டு அம்மணலைக் கடலில் உகுத்த சிறு அணிற்பிள்ளையின் நன்முயற்சி அங்கீகரிக்கப் பட்டவாறே, கல்வி கேள்வியால் நிறைந்த இத் தலைமுறைச் சிரேஷ்டர் அங்கீகரித்து எனது இச்சிறு முயற்சியும் தமிழ் மாதாவுக்கு அற்பிதமாம்படி அருள் புரியா தொழியார் என நம்பிப் பிரகடனம் செய்யப்படுகின்றது. இந் நாடகம் வடமொழி ஆங்கிலேயம் முதலிய பாஷை களின் உன்ள நாடக வழக்கிற் கிசையச் செய்திருப்பதால் இதனுன்னடங்கிய கதை அங். கங்கே நடந்தேறும் சம்பா வடிணைகளாலும் அவாய் நிலைகளாலும் கோவைப்படுத்தி அறிந்து கொள்ள வேண்டியதாயிருக்கின்றது. இக்கதை புதிதாக இருப்பதினால் அவ்விதம் கோவைப்படுத்தி அறிந்து கொள்ளுவோர்க்கு அநுகூலமாகச் சுருக்கி சண்டுக் கூறப்படுகிறது. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/13&oldid=856131" இலிருந்து மீள்விக்கப்பட்டது