பக்கம்:மனோன்மணீயம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. .205. 210. 215. 220. 225. 230. மூன்றாம் அங்கம் : நான்காம் களம் 129 பலமுறை நம்மையே பரிந்திழுத் தாண் டவர் இலையுல கிடையென எண்ணுவ தெங்ங்ணம்? யாரிங் குலகெலாம் அறிந்திட வல்லார்? பாருமிங் கீதோ! பரம தயாநிதி நங்குரு நாத னென்பதார் ஒவ்வார்? நம்புவம் நீரும் நானுமிங் கொருப்போல், ஆயினும் பாரும்! அம்மணி மனோன்மணி, ஏதோ ஊழ்வினை இசைவால் தனது காதாற் கேட்கவும் கண்ணாற் காணவும் இல்லா ஒருவனை எண்ணி மயங்கினள் அல்லல் இதுவே போதும். அஃதுடன் அப்புரு டன்றான் ஆரென ஆயில் ஒப்பறு புருடோத் தமனே என்ன எப்படி நோக்கினும் இசையும். அப்படியே செப்பினர் யாவும் தெரிந்த நம் குருவும் ஏதோ ஒருவன் சூதா ஏவிய துTதால் வந்ததே ஈதோ பெரும்போர்! போர்புர்ந் திடவரு புருடோத் தமனும் வார்குழல் மனோன்மணி மாதும், நோக்கில் நம்மிலும் எத்தனை நம்பிய அன்பர்! இம்மென ஒருமொழி இசைத்திவர் தம்மை ஒருவரை ஒருவர் உணர்த் திடப் பண்ணில் வெருவிய போரும் விளை துயர் அனைத்தும் இருவர்தம் துக்கமும் எல்லாம் ஏகும். இப்படிச் சுலபசாத் தியமாயிருக்க அபபடி ஒன்றும் அடிகளெண் ணாமல் சுருங்கை தொட்டிடவே துவக்கித் தன்திரு அருங்கை வருந்தவும் ஆற்றுமப் பணியே. சுருங்கை இதற்குஞ் சொல்லிய துயர்க்கும் நெருங்கிய பந்தம் நினைத்தற் கென்னை? ஒன்றும் தோற்றுவ தன்று என் தனக்கே என்று நான் எண்ணி எம்.குரு நாதன் திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய 1. முடியக்கூடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/131&oldid=856134" இலிருந்து மீள்விக்கப்பட்டது