பக்கம்:மனோன்மணீயம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் : நான்காம் களம் 134 ஏவிய வழியான் போவதே அல்லால் == ஆவதென் என்னால் ஆ! ஆ! நன்றே! சுந்தர ! கருணா கரரே! களைப்பற நீரிங்கு ஒருவா றுறங்கவென் றுன்னி அன்றோ 165. இவ்விடம் அனுப்பினோம்? என்னை சிறிதும் செவ்விதில் துரங்கா திருந்தீர்! சீச்சீ! எத்தனை நாளா யினநீர் துரங்கி! இத்தனை வருந்தியும் ஏனிலை துக்கம்? பன்னாள் இரவும் பகலும் உழைத்தீர்; 270. எந்நா ளாறுவீர் இவ்வலுப் பினிமேல்? கருணா : அடியேற் கலுப்பென்? அருளால் அனைத்தும் முடிவது மேலும், யான்வரும் வேளை is இட்டமாம் நிட்டா பரரும் தனியாய் நிட்டைவிட் டெழுந்தார்; இருவரும் அதனால் 275. ஏதோ சிலமொழி ஒதுமற் றிருந்தோம்: ஈதோ உதயமும் ஆனதே; இனியென்? சுந்தர : o விடிந்த தன்றிது; வெள்ளியின் உதயம் படும், படும்; மிகவும் பட்டீர் வருத்தம். உங்கள் பேச் சறிவோம்; ஒயாப் பேச்சே! 280. இங்கது முடியுமோ? ஏனுங் கட்கும் சமயிகட் காம்சச் சரவு? அமையும் உங்கட் கவரவர் நிலையே. (2) (யாவரும் போகர் மூன்றாம். அங்கம் நான்காம் களம் முற்றிற்று. (கலித்துறை) சாற்றரும் ஆபதந் தான் தவிர்த் தின் பந் தரமுயன்று தோற்ற்ருங்கற்புட்ைேேயதோ அமைத்தனன் சுந்தரனே வேற்றுரு வாய்கம் வேதித்து நம்மை விளக்குமவன் மாற்ற மனுபவம் வந்தபின் னன்றி மதிப்பரிதே. மூன்றாம் அங்கம் முற்றிற்று 1. சமயத்தார் 2. ஆபத்து 3. சுருங்கை, இரகசிய வழி (secre8. way) 4. வேறுபடுத்தி 5.Tசொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/133&oldid=856137" இலிருந்து மீள்விக்கப்பட்டது