பக்கம்:மனோன்மணீயம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் முதற் களம் இடம் : படை பயில் களம். காலம் : காலை (பலதேவன் படையணிவகுக்க, குடிலன் அரசனை எதிர்பார்த் தொருபுறம் நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா) குடிலன் : (தனிமொழி) பருதியும் எழுந்தது பொருதலும் வந்தது, 權 (பெருமூச்செறிந்து; கருதுதற் கென்னுள காணுதும். ஆ1 ஆ! ஒருவன தாசைப் பெருக்கால் உலகில் வருதுயர் கடலிற் பெரிதே! வானின் 5. எழுந்தவில் இரவி விழுந்திடு முன்னர் ஈண்டணி வகுக்குமிக் காண்டகும் இளைஞரில் மாண்டிடு மவர் தொகை மதிப்பார் யாரே! மாண்டிடல் அன்றே வலிது. மடுவுள்' இட்டகல் லாலெழும் வட்டமாம் விரிதிரை 10. வரவரப் பெரிதாய்க் கரைவரை வரல்போல், நின்றவில் வீரரை ஒன்றிய மனைவியர் உற்றார் பெற்றார் நட்டார் என்றிப் படியே பரவுமே படியெலாம் துயரம்1... H 單 (சற்று நிற்க) என்னை என்மதி இங்ங்னம் அடிக்கடி 15. என்னையும் எடுத்தெறிந் தேகுதல்? சிச்சீ! மன்னவர்க் காக மாள்வ திவர்கடன். மன்னவன் என்போன் மதியில் வலியோன், அன்றியும் பலநாளாக நம் அன்னம் தின்றிங் கிருந்திவர் செய்ததென்? அவர்தம் 20. உடன்பா டி.துவே கடம்"பாடாற்றும் 1 . குளத்தில், 2. கடமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/135&oldid=856141" இலிருந்து மீள்விக்கப்பட்டது