பக்கம்:மனோன்மணீயம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் மூன்றாம் களம் இடம் : அரண்மனையில் ஒரு சார். . காலம் ; நண்பகல் (ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க: சேவகர் வாயில் காக்க1 (நேரிசை ஆசிரியப்பா) முதற் சேவகன் : - செய்வதென்? செப்பீர். கைவதற்: கியாமோ ஆறுதல் கூறுவம்? 2-ஆம் சேவகன் : கூறலும் வீணே! பெருத்த துயரிற் பேசும் தேற்றம் நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர். 3-ஆம் சேவ : பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்? 4-ஆம் சேவ : நாரா யணரேல் தீரமாய் மொழிவர். 3-ஆம் சேவ : மெய்ம்மை! மெய்ம்மை! விளம்புவர் செம்மையாய் முதற் சேவ : எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்? 4-ஆம் சேவ : மங்கைவாழ் மனைக்குநேர் ஒடுதல் கண்டேன். 2-ஆம் சேவ : சகிப்பளோ கேட்கில் தமியள்... 3-ஆம் சேவ : ஆயினும் மகளால் அன்றி மன்னவன் தேறான் அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ! 1. பாண்டியன் (ஜீவகன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/151&oldid=856178" இலிருந்து மீள்விக்கப்பட்டது