பக்கம்:மனோன்மணீயம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் நான்காம் களம் இடம் : அரண்மனையில் ஒரு சார். காலம் : மாலை (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை: பலதேவன் ஒருபுறம் நிற்க) (நேரிசை ஆசிரியப்பா) ஜீவகன்: ஆதி இன்னதென் றோதுதற் கரிய வழுதி' யின் தொழுகுல வானாள் ஒரிரா என மதிப் பதற்கும் இருந்ததே குடில! இத்தனை கேடின் றெங்கம்ை விளைந்தது? 5. சற்றும் அறிந்திலேன் தையலர் புகலுமுன் மாற்றார்" நமது மதிற் புறத் தகழைத் - துார்த்தார் எனப்பலர் சொல்லுவ துண்மை கொல்? குடில : ஒரிடம் அன்றே. உனர்ந்திலை போலும். (தனதுள்) வேரறக் களை குதும். இதுவே வேளை. ஜீவ ! 10. என்னை 1 என்னை ! குடில : மன்னவா! யானிங் கென்னென ஒதுவன் இன்றையச் சூது? ஜீவ : மருவரு மதிலுள கருவியென் செய்தன? குடில : கருவிகள் என்செயும் கருத்தா இன்றியே! ஜீவ : காவல் இல்லைகொல்? சேவகர் யாவர்? _ -- 1. பாண்டியன் 2. பெண்கள் 3. பகைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/165&oldid=856206" இலிருந்து மீள்விக்கப்பட்டது