பக்கம்:மனோன்மணீயம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#66 மனோன்மணியம் தெரிவுறும் அறிவெனக் கிருந்தும், திருவுளம் நிலவிய படியே பலதே வனைப்படைத் தலைவனாய் ஆக்கிடச் சம்மதித் திருந்தேன்; எனதே அப்பிழை, இலதேல் இவ்விதம் 65. நினையான் இவனுயிர் நீங்கிடப் பாவி! அதன் பின் ஆயினும் ஐயோ! சும்மா இதமுற இராதுபோர்க் களமெலாம் திரிந்து கடிபுரி காவற் படைகளும் தானுமாய் இடம்வலம் என்றிலை; இவுளி தேர் என்றிலை; 70. கடகயம்’ என்றிலை; அடையவும் கலைத்து கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை (விம்மி) ஜீவ கண்டனம் யாமே. குடில : காலம்! காலம்! ஜீவ : கொண்டுவா நொடியில் [2-ம் சேவகனை நோக்கி) 2-ம் சேவ - அடியேன்! அடியேன்! s (2-ம் சேவகன் போகர குடில : சென்றது. செல்லுக. ஜயிப்போம்_நாளை 75. ஒன்று நீ கேட்கில் உளறுவன் ஆயிரம். நெடுநா உடையான். கேட்டினி என்பயன்? ஜீவ : விடுவேம் அல்லேம், வெளிப்படை கேட்பதென்? எழுமுன் அவன்கழு ஏறிடல் காண்குதும். குடில் : தொழுதனன் இறைவ! பழமையன்! பாவம்! 80. சிறிது செய்கருணை. அறியான்! ஏழை! ஜீவ : எதுவெலாம் பொறுக்கினும் இதுயாம் பொறுக்கிலம். எத்தனை சூதுளம்! எத்தனை கொடியன்! குடில : சுத்தன்! 1. குதிரை 2. மதயானை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/168&oldid=856212" இலிருந்து மீள்விக்கப்பட்டது