பக்கம்:மனோன்மணீயம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : நான்காம் களம் s 165 எத்தனை துட்டன்! எண்ணிலன்! சற்றும் ! குடில ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது? தெய்வமே அறியுமென் சித்த நிலைமை! 40. வெளிப்பட ஒருமொழி விளம்பிடில் யானே களிப்புடன் அளிப்பனக் கணமே அனைத்தும். விடுவேம் அதற்கா வேண்டிலெம் உயிரும்! போர்முகத் திங்ங்ணம் புரிதலோ தகுதி? (பலதேவன் மார்பைக் காட்டி) |lவ : யார்? யார்? நாரணன்? (பலதேவனை நோக்கி; பலதே : ஆம்! அவன் ஏவலில் 45. வம்பனங் கொருவன்... Меu : நம்பகை அன்று பின்? குடில நின்பகை அன்றுமற் றென்பகை அறைவ! | வ | உன் பகை என்பகை! ஒ! ஒ! கொடியவன்! செய்குவன் இப்போ தேசிரச் சேதம்! இடங்குழம் பியதிங் கிதனாற் போலும்? கடில : 50. அடங்கலும் இதனால் ஐய! அன்றேல் இடப்புறம் வலப்புறம் யாதோ குழம்பும்? மடப்பயல் கெடுத்தான்! மன்ன! நம் மானம் ஒருமொழி அல்லா திருமொழி ஆயின் வெருவர வெம்படை வெல்லுவ தெங்ங்ணம் ாவ : 55. அழைநா ரணனை, -- (முதற் சேவகனை நோக்கி; முதற் சேவ : அடியேன், ма, : o நொடியில், (சேவகன் போக) பழமையும் பண்பும் நாம் பார்க்கிலம்; பாவி! இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்? குடில : சுத்தமே மடையன்! சுவாe! பொறுத்தருள் என்னதே அப்பிழை மன்ன! நீ காக்குதி! 60. வருபவை உன் திரு வருளால், வருமுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/167&oldid=856209" இலிருந்து மீள்விக்கப்பட்டது