பக்கம்:மனோன்மணீயம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : நான்காம் களம் 173 ஆயினும், வீரர்நீ ராதலின், நும்முடன் 185. ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை அளிப்பிரோ அறியேன்? (படைஞர் நெருங்கிச் சூழl சேவகர் : அளிப்போம் உயிரும். குடில : (பலதேவன் காதில்) ஒளித்ததிங் குணர்வனோ? ஓ! பல தேவ! காரா : ஒருதின மேனும் பொருதுளேன் உம்முடன் கருதுமின் என்னவ மானமுஞ் சிறிதே. சேவகர் : 190. உரியதே எமக்கது, பெரிதன் றுயிரும்: (யாவரும் கவனமாய்க் கேட்க) குடில : (தனதுள்) எரியிடு வானோ இல்லிடை? ஐயோ! , дѣ тЈ ПТ : சொல்லுதும்! அத்தனை அன்புநீர் வைத்துளிர் ஆயின் என்மொழி தனக்குநீர் இசைமின் எனக்காத் தீதோ ஆயினும் செமித்தருள் புரிமுன்! சேவகர் : = 195. யாதே ஆயினும் சொல்லுக! едъ пут : சொல்லுதும். போர்க்களத் துற்றவை யார்க்கும் வெளிப்படை ஊர்ப்புறத் தின்னம் உறைந்தனர் பகைவர்; நாற்புறம் நெருப்பு: நடுமயிர்த் துாக்கின் மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி நிலைமை. 200. இதனினும் அபாயமிங் கெய்துதற் கில்லை. நுந்தமிழ் மொழியும் அந்தமில் புகழும் சிந்திடும்; சிந்திடும் நுஞ்சுதந் தரமும். இத்தகை நிலைமையில் என்னை நும் கடமை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/175&oldid=856227" இலிருந்து மீள்விக்கப்பட்டது