பக்கம்:மனோன்மணீயம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...to or ந்தர 125. 130. 135. ஜீவ H 140. சுந்தர : 145. ஜீவ : மனோன்மணியம் துபோ லில்லை அடிகள் செய்யும் உதவி! தமியேற் குளதுயர் இதுவே: கண்மணி தனையெணிப் புண்படும் உள்ளம் அருளுதி காக்கும் உபாயம், இருணிறை இடுக்கணுக் கியைந்திடு மருந்தே! நல்லது! கேட்டி! சொல்லுதும், உரிய நீர் விட்டான் முதலையும் விரும்பிய திலகப் பட்டாற் களிறும் பலமில ஆகி விடுமென அறிந்த கெடுவினை யாளர் தொடர்பினால் அவரிடு துரண்டிலிற் சிக்கி இடமது பெயர்ந்துழி, எடுத்த வெவ் வினைக்கும் கேடுமுன் கருதிக் கோடலே முறையெனும் அறிவோர் மொழியயர்ந் திறுமாப் பகத்துட் கொண்டு நீ நின்றதைக் கண்டிக் கடிபுரி தொட்டென் உறையுள் மட்டுமோர் சுருங்கை அதிரக சியமாய் அமைத்துளேன். அவ்வழி, சதமென நம்புமிச் சாலி புரமும்: அதன் புறம் ஊன்றிய அடர்புலப் படையும், அறிந்திடா வகையவை கடந்துசென் றுன்னை மறந்திடா மாபதி அடைந்திடச் செயுமே. தேவரீர் செய்யும் திருவரு ளுக்குமா றாவதும் உளதோ! ஆ! ஆ! அடிகாள்! வழுதியர் பலர்பலர் வழிவழி காக்கும் முழுமதித் தொழுகுலத் தெய்வ நீ போலும்! பழுதற நீயிவண் பகர்ந்ததோர் வழியிது திருத்திட எடுத்த வருத்தமெத் தகைத்தே! நல்லது முகமன் நவின்றனை, நிற்க, சொல்லிய சுருங்கை உனக்குமிவ் விடுக்கணில் உதவுமோ அன்றோ உரைக்குதி விரைந்தே. அடியேன் ஆசை திருவடி அறியும். 1. திருநெல்வேலி 2. மதுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/184&oldid=856245" இலிருந்து மீள்விக்கப்பட்டது