பக்கம்:மனோன்மணீயம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : ஐந்தாம் களம் 183 கடிபுரி விடிலுயிர் நொடியுமிங் கிராது. 150. பர்ண்டியர் குலமெனும் பாற்கடல் உதித்த காண்டகு கன்னியை இவ்வழி உன்திரு உளப்படி கொடுபோய் அளித்திரு ளுதியேல், இந்துவின் குலமெனும் முந்திய பெயர்போய்ச் சுந்த்ரன் குலமெனச் சந்ததம் வழங்கும். 155. நீங்கா திதுகா றென்னுளம் நிறைந்த தாங்காப் பெருஞ்சுமை தவிர்தலாம்; யானும் ஒருமனம் உடையனாய் மறலி'யும் வெருவ ஆறறுவன் அரும்போர் அகனிடை யமபுரம் ஏற்றுவன் எங்குலம் துாற்றிய சேரனை: 160. வென்றி.டின் மீளுவன் அன்றெனிற் பண்டே அணையிலாத் தனையளுக் கம்மையும் அப்பனும் தயாநிதி! நின்றிருச் சரணமே என்ன வியாகுல4 மறவே விடுவனென் உயிரே. சுந்தர : விடுகிலை, ஆகினும் வெளிக்கடல் ஒட்டம். 165, நடுநிசி நாமினி வருகுதும். கொடிய கரி புடிக் கனலிடைக் காய்ந்திடும் உன் றன் சிறுகொடி மறுவிடம் பெயர்த்தும் சிறந்த அந்தமில் செழியரைத் தந்திட உரித்தே. Pஎழுந்து: ஜீவ கட்டளைப் படியே? கட்டிய கற்படை 170. கண்டிட ஆசையொன் றுண்டடி யேற்கு. சுந்தர : காட்டுதும் இன்றிரா கற்படை சேர்முறை. ஒருவர் ஒருபொருள் அறியில் இரகசியம்: இருவர் அறிந்திடிற் பரசியம் என்ப. கைக்கெட் டியதுதன் வாய்க்கெட் டுதற்குள் 175. வந்துறும் அந்தமில் பிரதிபந் தங்களே” (முனிவர் போக) ஜீவ : வந்தனம், வந்தனம், அடிகாள்! வந்தனம். (தனிமொழி) 1. எமன் 2. துன்பம் 3. தடை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/185&oldid=856247" இலிருந்து மீள்விக்கப்பட்டது