பக்கம்:மனோன்மணீயம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 180. 185. 190. 195. 205. மனோன் மணியம் என்னே! என்னே! இந்நாள் இயன்றவை: கொன்னே கழிந்தன் றோரின்மக் கொட்டும். குகுநாள் மழையொடு மிகு காற் றெறிந்த பரவையின் பாடெலாம் பட்டதென் உளமே. இரவினில் வருபவை எவையெலாம் கொல்லோ? தாயே! தாயே! சார்வன சற்றும் ஆயேன், எங்ங்ணம் பிரிந்துயிர் ஆற்றுவேன்? விடுக்குமா றெவனென் விளக்கே? உன்னைக் கெடுக்குமா றெவனினி கிளர்போ ரிடை?அது தடுக்குமா றெவனினி சமழ்ப்பற் றுடலம் பொறுக்குமா றெவனிப் ப்ொல்லா வல்லுயிர் துறக்குமா றெவனுனைத் துணையற விடுத்தே? அந்தோ! அந்தோ! என்றன் தலைவிதி ! நாற்புற நெருப்பு:றி னளியும் தனது வாற்புற நஞ்சால்_மாய்ந்திடும் என்ப, நசனலன்: நரேந்திரன்: நானது போற்சுதந் தரனலன் எனிலென் தலைவிதி கொடிதே! பிரிவென என்னுளம் கருதிடு முனமே பிரையுறு பாலென உரைவதென் உதிரம் நானா துன்முகம் காணுவ தெவ்விதம்? நடுநிசிப் பொழுது தொடுகற் படைவழி முனிவரன் பிற்குனைத் தனிவழி விடுத்திவண் தங்குவன் யானும்! தங்குவை நீயும்! இங்கதற் கிசையேன் இறக்கினும் நன்றே! --- -- மெளனம்? கற்படை இதுதான் எப்புறத் ததுவோ உரைத்திலர் முனிவர் ஒளித்தனர். இஃதும் உளதோ? இலதோ? உணர்பவர் யாவர்? . முனமே முனிவன் மொழிமணம் அன்றோ இணையவிப் போர்க்கெலாம் ஏதுவாய் நின்றது! கூடிய தன்றது! ஏ! ஏ! (சேவகன் வர). குடிலனை ஒடியிங் கழையாய்! (சேவகன் போக): உண்மையெப் படியெண் 1. அமாவாசை 2. நாணம் 3. தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/186&oldid=856249" இலிருந்து மீள்விக்கப்பட்டது