பக்கம்:மனோன்மணீயம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கம் : முதற் களம் (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) குடில : சேரனே யாமிது செப்பினோன் போரின ல் ஒருபுறம் ஒதுங்கி அரசனை அகற்றி நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன். 50. ஒன்றது கூலம் உரைத் தான். நன்றே ஊரிவன் விடுத்ததும் போரிவன் தொடுத்ததும் எண் ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை. நண்ணுதும் நெருங்கி! நல்லது திரும்பினன். ■ (புருடோத்தமன் திரும்பி வர புரு : (தனிமொழி) என்றும் கண்டிலம் இன்றுகண் டதுபோல், 55. எத்தனை முகத்திடைத் தத்துறு துயரம்! இவ்வயின் யான்வந் திருத்த நாள் முதலாக் கெளவை"யின் ஆழ்ந்தனை போலும் ஐயோ! (குடிலன் எதிர்வர! குடிலனை நோக்கி) ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தrணம்: குடில அடியேன்! அடியேன்! குடிலன்! அடிமை! புரு ! 60. வந்ததென் இருள்வயின்? வாளிடென் அடியில் குடில வெந்திறல் வேந்த நின் வென்றிகொள் பாசறை சேர்ந்துன் அமையம் தேர்ந்து தொழுது ஓர் வார்த்தையுன் திருச்செவி சேர்த்திடக் கருதி வந்தனம் அடியேன்; தந்தது தெய்வம் 55. உன்றன் திருவடி தரிசனம் உடனே ! சிந்தையெப் படியோ அப்படி என்செயல். புரு : செப்புதி விரைவில், செப்புதி வந்தமை! குடில ஒப்பிலா வீர! எப்புவ னமுநின் 1. தாங்கிய 2. துன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/197&oldid=856275" இலிருந்து மீள்விக்கப்பட்டது