பக்கம்:மனோன்மணீயம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 மனோன்மணியம் வாணி ஆயினும் அம்மா! யாரிஃத றியார்? பாயிருள் தொகுதியிப் பரிதியும் கொடிய 100. வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர் ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ங்னம் இசைந்தனை என்க: என்னையுன் நினைவோ! என்னையுன் துணிபோ : இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை! மனோன் : | (அழ) 105. வருந்தலை வாணி வா வா இன்னும் தெரிந்திலை. ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. - ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை? 110. திதற இன்பம் துய்ப்பநீ எண்ணில் ஈதல அதற்காம் உலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ் யாக்கையில் அமையுமோ நீக்கமில் இன்பம்? எனக்கெனக் கென்றெழும் இச்சையா திகளெனும் 115. மனக்களங் கங்களாம் மாசுக்கள் அனைத்தும் o தேய்த்தவை மாற்றித் திகழொளி யேற்றி மண்ணிய மணியாப் பண்ணிட என்றே வைத்தஇக் கடிய வாழ்க்கையாம் சாணையை பைத்தபூஞ் சேக்கையாப் பாவித்துறங்க 120. யத்தனஞ் செய்திடும் ஏழையர் போல என்னை நீ எண்ணினை! வாணி! இந்தச் சுகவிருப் பேநமைத் தொழும்புசெய் பந்தம். தவமே சுபகரம் தவமென உணருவை? உடுப்பவை உண்பவை விடுத்தரண் அடைந்து 125. செந்தி ஐந்தி டைச் செறிந்தமைந் துறைதல் ஆதிய ஒதுப அல்ல. அவற்றைத் திதறு தவமெனச் செப்பிடார் மேலோர். இவ்வுயிர் வாழ்க்கையில் இயைந்திடும் துயரம் 1. வடிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/206&oldid=856296" இலிருந்து மீள்விக்கப்பட்டது