பக்கம்:மனோன்மணீயம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 - மனோன்மணியம் படியாகப் புகழ்ந்து பாராட்டுதற்குரியது. முரண்பட்ட பாத்திரப் படைப்புக்கள், சுவையாக வளர்ந்து செல்லும் கதை, தத்துவ விளக்கமாக நாடகத்தின் இடையில் அமைந்: துள்ள சிவகாமி சரிதம்-ஆகிய அனைத்தும் சேர்ந்து மனோன்மணிய நாடகத்தினை ஒர் ஒப்பற்ற நாடக நூலாக்கி விடுகின்றன. இனி மேற்கூறப்பெற்ற செய்திகளை முறையே விளங்கக் காண்போம். மொழிப் பற்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் கூறும் தமிழ்த். தெய்வ வணக்கம் அவர்தம் மொழிப்பற்றினை எடுத்துக் காட்டுவதாகும். கடலால்குழப்பட்ட நிலவுலக மடந்தையின் முகம் பரத கண்டமாகவும், அம்மடந்தையின் நெற்றி தக்கனமாகவும் அம்மடந்தையின் நெற்றிப்பொட்டு திராவிட நாடாகவும், அம்மடந்தை இட்டுள்ள பொட்டி லிருந்து எழும் இனிய மணம் தமிழாகவும் எண்ணிப் பேராசிரியர் பாடல் புனைந்துள்ளார். *னத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருங்தமிழணங்கே" என்று தமிழ்த்தாயைப் போற்றிப் புகழ்கின்றார். பின்னர் பல்லுயிரையும் பலவுல கினையும் படைத்தளித்துத் துடைக்கும் எல்லையற்ற பரம். பொருள் போலவே தமிழ்மொழி யும், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய மொழிகளை வளர்த்து ஆளாக்கி விட்டும், ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து போகாமல் வாழ்வதாகக் குறிப்பிட்டுத் தமிழின் சீரிளமை கண்டு திறம். வியந்து செயல் மறந்து வாழ்த்தி நிற்கின்றார். தமிழின் பெருமையினை மேலும் கிளத்திக் கூறக் குடமுனி கடல் குடித்த கதையினையும், நக்கீரர்.சிவனாரி கதையினையும், வைகை ஆற்றிலே ஞானசம்பந்தப் பெருமா திருவாசகத்தினைச் சிவபெருமானே பிரதி செய்த கதை யினையும் எடுத்துக் கூறுகிறார். பத்துப்பாட்டின் கற்பனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/222&oldid=856333" இலிருந்து மீள்விக்கப்பட்டது