பக்கம்:மனோன்மணீயம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நாடக மாண்பு 221 வளத்தினையும், திருக்குறளின் நீதியுணர்வினையும், திருவாசகத்தின் உருக்கத்தினையும் அடுத்து மொழி கின்றார். பத்துப் பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்து ணையும்பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே? வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறகள் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி யொருகுலத்துக் கொரு திே: மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ? இவ்வாறு தமிழ் இலக்கியப் பெருமைகூறும் பேராசிரியள் சுந்தரம் பிள்ளை,தமிழ்த்தாயின் கணைக்காற்கு ஒள்ளிய சிறு விரலணியாக இந்நாடகத்தினை நல்கியுள்ளதாக அடக்கத் தோடு கூறிக்கொள்கிறார். ஜீவகன் தன் படைவீரர்க்கு வீரவுரையாற்றும் பொழு தும் விந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி என்று குறிப்பிடுகின்றான். மேலும் அன்னையர் தம் குழந்தைய ரோடு கொஞ்சிக் குலாவி உறக்கம் வரத் தாலாட்டுப்பாட்டு இசைத்த மொழியும் தமிழே என்று எடுத்து மொழிகிறான் ஜீவகன். - பழையோர் பெருமையும் கிழமையும் கீர்த்தியும் மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி கித்திரை வருவகை ஒத்தறுத் துமது தொட்டில்தா லாட்ட, அவ் இட்டமாம் முன்னோர் தீரமும் செய்கையும் வீரமும் பரிவும் எண்ணி இருகணும் கண்ணிர் கிறையக் கண்துயிலாதுநீர் கனிவுடன் கேட்ட வண்தமிழ் மொழி. -அங்கம் 4: களம் 10 ) , ! ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/223&oldid=856335" இலிருந்து மீள்விக்கப்பட்டது