பக்கம்:மனோன்மணீயம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மனோன் மணியம் தாயினும் சிறந்த தயைபூண் டிருந்ததும் தேயமாம் தேவிக்குத் தீவினை யிழைக்கத் துணிந்தவில் வஞ்சரை எணுக்தொறும் எணுங்தொறும் அகந்தனில் அடக்கியும் அடங்கா தெழுந்து புகைத்துயிர்ப் பெறியப் பொறிகண் பொரிய நெடுங் திரட் புருவம் கொடுக்தொழில் குறிப்ப வளங்கெழு மீசையும் கிளர்ந்தெழுந் தாடக் களங்கமில் நும்முகம் காட்டுமிச் சினத்தீ கண்டு அப் பாண்டியே கொண்டனள் உவகை அலையெறிங் தீதோ ஆர்த்தனள். -அங்கம் 4; களம் 1, 83.92 வஞ்சிநாட்டார் சிங்கத்தின் குகைக்கு வந்து சிங்கத்தின் பிடரி மயிரைப் பிடித்திழுப்பது போன்று, பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்துள்ளனராம். எனவே போரில் பாண்டிய நாட்டு வீரர்கள் சிந்தும் ஒவ்வோர் இரத்தத் துளியும் உலகம் உள்ளளவும் பாண்டிய வீரர்களின் புகழைச் சொல்லுமென் றும், சுதந்திரமே சுவாசக் காற்றாக அவர் கட்கு அமைய வேண்டும் என்றும் வீரவுரை பகர்கிறான் ஜீவகன். பாண்டியர் உரிமை பாராட்டும் பண்பினர் என்றும், அவர்கள் செருக்கான சீர்மை வாழ்வினைப் பகைவர்கள் தீண்ட முனையக் கூடாது என்றும், தீண்டினால் பாண்டிய வீரர்களின் கோபத் தீயினுக்குச் சேர நாட்டு வீரர்கள் விறகாவார்கள் என்றும் வீரம்கொப்புளிக்க்ப் பேசுகின்றான். வந்தஇக் கயவர் நும் சிங்தையிற் கொளுத்திய வெங் தழற் கவரே இந்தனம் ஆகுக! இன்றுநீர் சிங்தும இரத்தமோர் துளியும் நின்றுகம் பலவும் நிகழ்த்துமே. இந்தப் பாண்டியர் உரிமை பாராட்டும் பண்பினர்; தீண்டன்மின் திருந்தலீர்! அவர்தம் செருக்கு சுதந்தரம் அவர்க்குயிா, சுவாசமற் றன்று. கினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/226&oldid=856339" இலிருந்து மீள்விக்கப்பட்டது