பக்கம்:மனோன்மணீயம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நாடக மாண்பு 225 என முர சறையுமே எத்திசை யார்க்கும் இத்தனிப் போரில் நீர் ஏற்றிடும் காயம் -சித்தங் களித்து ஜயமே துமக்கு முத்தமிட் டளித்த முத்திசை ஆகி எத்தனை தலைமுறைக் கிலக்காய் கிற்கும் போர்க்குறிக் காயமே புகழின் காயம். யார்க்கது வாய்க்கும்! -அங்கம் 4; களம் 1, 139.152 மேலும் ஜீவகன், அத் திப் பழத்தில் கொசுக்கள் பல தோன்றிச் சாவது போல வாழ்வு அமையக் கூடாது என்றும், பிறந்தவர் என்போர் புகழுடன் சிறந்தவரே என்றும் போரில் அடையும் விழுப்புண், புகழின்கண் என்றும், வீரர் போரில் மாள்வது இரந்தும் பெறத்தக்கது." என்றும், கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிந்தான். ஜீவகன் வீரவுரையில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் வீரவுணர்வினைப் பெருமிதம் தோன்றச் சிறக்கப் புலப்படுத்தியுள்ளார். தொல்குலமாம் மதிகுலத்தில் வரும் ஜீவகமன்னன், முதல் நாட்போரில் தோல்வி கண்டவுடனேயே தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறான். நாராயணன் நல்ல சமயத் தில் வந்து அச்செயலைத் தடுக்கிறான். கல்லும் உருகிக் கண்ணிர் விடும்படி யும் புல்லும் கேட்பிற் புறப்படும் போர்க்கு' எனும்படியும் வீரவுரை யாற்றிய ஜீவகன் மான வுணர்வு துாண்ட இம்முடிவுக்கு வருகிறான். மயிர் நீப்பின் வாழாத கவ்ரிமானைப் போலத் தன் உயிர் நீக்க ஜீவகன் துணிந்தது வீரவுணர்வோடு கூடிய மானவுணர்வினைப் புலப்படுத்துவதாகும். i. திருக்குறளினை மேற்கோள் காட்டுதல் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணி யத்தில் ஏறத்தாழ இருபத்தைந்து இடங்களில் திருக் குறளைக் கையாண்டுள்ளார். பலவிடங்களில் திருக்குறட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/227&oldid=856341" இலிருந்து மீள்விக்கப்பட்டது