பக்கம்:மனோன்மணீயம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 மனோன்மணியம் கருத்துக்களைத் தழுவி எழுதியுள்ளார். திருக்குறள் தொடர் களையே அகழ்ந்து அவர் தருகின்ற இடங்களை மிகுதியாக மனோன் மணியத்தில் காணலாம். இவர் திருக்குறளை மேற்கோள் காட்டும் இடங்கள், இடமும் காலமும் பொருத்தமுற அமைந்து நயம் பயப்பதாயுள்ளன. இனிச் சில சான்றுகளைக் காண்போம்: முதல் அங்கம் ஐந்தாம் களத்தில், குடிலன் தன் மனை யில் மாலை நேரத்தில் உலாவிக்கொண்டே தனக்குள் தனி மொழியாகப் பேசிக்கொள்கிறான். புத்தியே சகல சத்தியும்" என்று தன் நினைப்பைத் தொடங்குகின்றான். இதுவரை யில் அவன் போட்ட திட்டங்களெல்லாம் இனிதாக நிறை வேறினதாக இறு ம்யூதெய்கிறான். அவனுக்கு உட்பகை யினை விளைவித்த மதுரையை விடுத்துத் திருநெல்வேலியில் கோட்டையைக் கட்டி, மன்னனைக் குடியேற்றிய பிறகு, "தானே யரசும் தானே யாவும் என்னும் நிலைக்கு வந்து விட்டதாக எண்ணுகின்றான். மன்னவன் தன்னுடைய நிழலில் மறைந்துவிட்ட தாகவும் மனதில் எண்ணுகின்றான். "பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்' என்று எண்ணுவ தோடு, அரசன் இறந்தால் அடுத்துத் தனக்கே அரசாளும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதுகிறான். கருவியுங் காலமும் அறியில் அரியதென்' என்று எதிர்நோக்கியிருக்கும் சந்தர்ப் பங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டம் போடுகிறான். அதே சமயத்தில் மனோன்மணி. கொண்ட காதல் நோயினையும், பலதேவனை அவளிடத்தில் பலமுறை அனுப்பினால் ஒருக்கால் அவனை மணக்க அவள் உடன்படலாம் என்றும் உறுதியாக நம்புகின்றான். இவ்வாறு பல்வேறு எண்ணங்களைத் தனக்குள் எண்ணிக். கொண்டிருக்கும் பொழுதுதான் ‘கருவியுங் காலமும் அறியில் அரியதென்?" என்று தனிமொழியில் சிந்திக்கிறான் குடிலன். இக்கருத்து, திருக்குறளில் காலமறிதல்" என்ற அதிகாரத்தில் வரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/228&oldid=856343" இலிருந்து மீள்விக்கப்பட்டது