பக்கம்:மனோன்மணீயம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மனோன்மணியம் சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். -திருக்குறள் 664 என்னும் குறளினை நினைவூட்டுகின்றது. மூன்றாவதாக, புலரியம் பொழுதில் கீழ்வானத்தில் தகத்தகாய கோலமாய்க் கைப்புனைந் தியற்றாக் கவின்பெறு வனப்புடன் தோன்றும் கதிரவனின் அழகிலும், காலைக் காட்சிகளிலும் மனத்தைப் பறிகொடுத்துவிட்டு நிற் கிறான், இயற்கைப் பித்தனும் வாணியின் காதலனுமான நடராசன். இயற்கைப் பொருள்கள் எல்லாம். ஏதோ ஒரு செய்தியினை உரைப்பன போல அவனுக்குத் தோற்று கின்றன. வாய்க்காலின் கரையில் இணையாக இருந்து மகிழ்ந்து விளையாடும் இரண்டு நாரைகளைக் காண்கிறான். உடனே தன் காதலி வாணியின் நினைவு அவனுக்குத் தோன்றுகின்றது. முன்னர் ஒரு நாள் இருவர்க்கும் இடையே நிகழ்ந்த நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. தான் ஒரு புதிய குவளைமலரைப் பறித்து அவள் கையில் கொடுக்க, அதனை அவள் தன் அழகுக் கூந்தலில் சூட்டிக் கொள்ளாமல், காதலனை மதியாதவள் போன்று ஒடுகிற நீரில் அக் குவளைப் பூவினை எறிந்து வேடிக்கை பார்த்ததாகவும், பின்னர், இச்செயலால் தான் கோபங்கொள்ளுவனோ என்று எண்ணி அவள் கலங்கியதையும் எண்ணிப் பார்க் கிறான். பின் அவள் அவ்வாறு கவலைப்பட்டிருக்கவேண்டிய தில்லை என்றும், அவள் உள்ளத்தைத் தான் முற்றிலும் அறிந்திருப்பதாகவும் கூறிக் .ெ க ா ள் கி ற ா ன். இவ் -- எண்ணத்தினை, உளத்தொடு உளஞ்சென் றொன்றிடில் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் என்று குறிப்பிடுகின்றான். * கண்கள் இரண்டும் ஒன்று கலந்து, அதன் வழி உளம் இரண்டும் ஒன்றிவிட்ட பிறகு, வாயிலிருந்து பிறக்கும் சொற்கள் எத்தகைய பயனும் தரா" என்ற கருத்தமைந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/230&oldid=856348" இலிருந்து மீள்விக்கப்பட்டது