பக்கம்:மனோன்மணீயம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நாடக மாண்பு 239. "மேலும் அந்தியில் மலரும் பவழமல்லிகை வெண்ணிறப். பூக்களுடன் துலங்குகின்றது. அவ் வெண்மை நிறப் பூச்சிகள் மலர் இருக்குமிடத்தை அறியத் துணை செய்கின்றது. அக்கள் பொருந்த, பூக்கள் கருக்கொள்கின்றன. இறைவன் படைப்பில் ஒவ்வொரு செயலும் காரண காரியத் தொடர்பு _டை யவை ஆகும். எனவே நாம் குருநாதர் ஆணையை மேற்கொண்டு, அவர் காட்டியவழியே கண்மூடி நடப்போம். உலகிடைத் துன்பங்களைக் கண்டால் எம்மையும் காத்த இன்னருள் இவரையும் செம்மையிற் காக்க" தி கெரி இறையருளை இறைஞ்சி நிற்போம். அழுதால் அவனைப் பெறலாம். அதுவே முத்தி பெறும் வழி; சித்தம் நற்சுத்தி பாகும் அருள் நெறி' என்று அருட்கடலாம் ஆண்டவனின் அளவிலாக் கரு ை ைப் பெருக்கின் திறத்தில் நம்பிக்கை கொண்ட நிலையில் கருணாகரர் பேசுகிறார். இவ்வாறாக, இவ்விரு துறவிகள் வாயிலாகத் தம் முடைய தத்துவக் கருத்துக்களைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணிய நாடகத்தில் வெளிப் படுத்தியுள்ளார். பாத்திரப் படைப்புகள் எடுப்பார் கைப்பிள்ளையாக, வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் ஜீவகன் ஒருபுறம், அருந்திறற் சூழ்ச்சியும் ஆராய்ச்சி நலமும் கொண்ட குடிலன் பிறிதொருபுறம்: இருவரும் அருகருகே இருந்து வாழ்கின்றார்கள். நடிக்கவே தெரியாத ஜீவகன், நடிப்புக் கலையில் வல்ல குடிலன்! உள்ளத்தில் இருப்பதை மறக்காது அப்படியே வெளியே கொட்டிவிடும் ஜீவகன், உள்ளத்தில் ஓடிவிடும் எண்ணங் களை மறைத்து வெளியில் வேறொன்று பேசும் மறைவுளம் கொண்ட குடிலன்! இவ்வாறு குண வேறுபாடு கொண்ட பாத்திரங்கள் இரண் டு, மனோன்மணி ய நாடகத்தினை நடத்திச் செல்கின்றன நாராயணன் இருவரையும் நன்குணர்ந்தவன். எனவே இருவர் தம் பண்பு நலன்களையும் ஒப்பிட்டு உண்மை காண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/241&oldid=856374" இலிருந்து மீள்விக்கப்பட்டது