பக்கம்:மனோன்மணீயம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 மனோன்மணியம் மனம் படைத்த நிஷ்டாபரர் பேசுகிறார்: கருக்கொண் டுள்ள சினை ஈயைச் சிலந்திப் பூச்சி கட்டிப்பிடித்து இரத்தத்தை உறிஞ்சும்பொழுது ஈ கதறியழும் குரலை யார் கேட்கின்றார்? யார் அதனை ஒடிப்போய்க் காக் கின்றார்? நம்முடலையும் நோவும் சாவும் வந்தெய்தும். ஐந்துகோடி யோசனை பரப்புள்ள இப் புவியினும் பெரியது சூரியமண்டலம். வானிடை ஒளிரும் விண்மீன்கள் சூரியனை விடப்பெரியவை. இவையனைத்தும் சேர்ந்து ஒரு பிரமாண்ட மாகும். இதுபோல் கணக்கற்ற பிரமாண்டங்கள் உள்ளன. திருமாலின் உந்திக்கமலத்தில் உதித்தவன் படைப்புக் கடவு: ளாகிய பிரமன். திருமா லோவெனில் பெருங்கடலில் ஒரு சிறு துரும்பு. பெருங்கடலும் இறைவனோடு ஒப்பிட்டுக் காணும்பொழுது கானல் நீராகத் தோன்றுமெனில் அற்ப உயிர்ப்பிராணிகளாகிய நாம் எம்மாத்திரம்! "நான், நீ, ஊர், பெயர் முதலியன மாயையின் அவத் தைகள். இயந்திரக் கல்லில் அகப்பட்ட சிறு பயறுகள் நாம். மாயா உலகில் துயரமே மிஞ்சும். உலகத் துன்பங்களை மறக்க உதவுவது துறவு. துறவு மேற்கொண்டால் சுட்ட சட்டி கையை விட்டதாகும். உலகை மறந்தால் மெய்ஞ் ஞானம் தோன்றும். பின் பேரின்ப வடிவான அநுபூதியின் சுகத்தை அடையலாம். இவ்வாறு பேரின் பத்தின் பெரும் பெற்றியினை நிஷ்டாபரர் கருணாகரருக்கு விளக்குகிறார். கருணாகரர், இகமும் எனக்கு வேண்டாம்: பரமும் வேண்டாம். என் குருநாதரின் பாதசேவையே எனக்குப் போதும். உலகம் பொய்யென்றால் சுந்தரர் கருணையும் பொய்யா? உடலை ஒம்பி, உலகத் துன்பங்களை நிலை யெனக் கருதி, நாமே எல்லாம் எனத் தருக்குற்று வீண் பெருமை பேசி, துன்பத்தில் துவண்டு வதங்கி இன்பத்தில் இறுமாந்து திளைத்து சிறியரைக் கண்டு செருக்கி, பெரிய ரைக் கண்டு மனம் பொறாது வாழ்ந்த அவல வாழ்விலிருந்து தம்மைக் கரை சேர்த்தவர் சுந்தரர் அல்லரோ?' '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/240&oldid=856372" இலிருந்து மீள்விக்கப்பட்டது