பக்கம்:மனோன்மணீயம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நாடக மாண்பு 237 Therefore am I still A lover of meadows and the woods And mountains; and all that we behold From this green earth; of all the migthy world என்றும் இயற்கையோடு தமக்குள்ள தொடர்பினைச் சுட்டி யுள்ளார். இதற்கொப்பவே இயற்கை யழகில் தோய்ந்து ஈடுபடும் நடராசன் என்ற பாத்திரத்தை ஆசிரியர் உருவாக்கி புள்ளார். சகடர் கூற்றுப்படி நடராசன், எங்கேனு மொருபூ இலைகணி யகப்படில் அங்கங் கதனையே கோக்கி நோக்கித் தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன் பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம் ஆயிரங் தடவை யாயினும் கோக்குவன் -அங்கம் 1 : களம் 3, 114-118 என்ற தன்மையில் காட்சியளிக்கின்றான். நடராசன் அருணோதயங்கண்டு நின்று இதனி மொழி யாகப் பேசிக்கொள்ளும் பேச்சிலும், குடிலனின் நன்செய் நாட்டு வருணனையிலும் இயற்கைக் காட்சிகளில் தோய்ந்த நூலாசிரியரின் நல்லுள்ளம் தெள்ளிதிற் புலனாவது காண்க. தத்துவ நூற் கருத்துக்கள் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் தத்துவப் Glar^r&f turrrest* (Professor of Philosophy) , , sxx? uumrAb அறியவர். எனவே தம் நூலின் பலவிடங்களிலும் தத்துவக் கருத்துக்களை எடுத்து மொழிந்துள்ளார். சுந்தரமுனிவர் தம் ஆசிரமத்தில் வாழும் நிஷடாபரரும் கருணாகரரும் ஒருபோது தத்துவ விசாரணையில் ஈடுபடு கின்றனர். உலகத் துன்பத்திற்குக் காரணம் பற்றி வேதாந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/239&oldid=856368" இலிருந்து மீள்விக்கப்பட்டது