பக்கம்:மனோன்மணீயம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மனோன்மணியம் திருவடி தீண்டப் பெற்ற இச் சிறுகுடில் அருமறைச் சிகரமோ ஆலகன் னிழலோ குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ Ητ Φ யாதென ஒதுவன்? -அங்கம் 1; களம் 1, 21-29 என்று பாராட்டுகின்றான். இப் பாராட்டுமொழி, பாண்ட வர்க்குத் துரதுவந்த கண்ணனை, முன்ன மேதுயின் றருளிய முழுபயோ ததியோ பன்ன காதிபப் பாயலோ பச்சையா லிலையோ சொன்ன கால்வகைச் சுருதியோ கருதி ேஎய்தற் கென்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடி...... -வில்லிபாரதம்: கிருட்டிணன் துாதுச் சருக்கம் 80 என்று வரவேற்ற விதுரன் மொழிகளோடு ஒப்பிட்டு நோக்கத் தக்கவை. இவ்வாறு இன்னும் பல சான்றுகளைக் காட்டிப் பேரா சிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் பன்னுாற் புலமையினை நிறுவலாம். இயற்கையின் பேரழகில் தோய்தல் o இயற்கையின் இனிய பெற்றியின் இனிமையில் ஈடுபட்ட வர்கள் பழந்தமிழர்கள். இயற்கையின் பின்னணியில் துலங்கிய பெருவாழ்வு அவர்கள் வாழ்வாகும். இயற்கை யழகின் இனிய சூழலில் இறைவனைக் கண்ட நாடு இது. எனவே, இயற்கைப் புனைவிற்கும் தம் நூலில் இடம் தந்துள் ளார் நூலாசிரியர். இயற்கை வழங்கும் இனிய செல்வம் குறித்து மகிழாமல், நாம் அற்ப செயல்களில் சிந்தையைச் செலுத்தி அழிகிறோம் என்பது வோர்ட்ஸ் என்னும் கவிஞரின் கருத்தாகும். | * Little we see in Nature that is ours We have given our hearts away a sordid boon I என்று அவர் கூறுவதோடு, o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/238&oldid=856366" இலிருந்து மீள்விக்கப்பட்டது