பக்கம்:மனோன்மணீயம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நாடக மாண்பு 235 சிறைவு முண்டே செழும்புனல் மிக்குழிஇ -மணிமேகலை ! 5.19 _என்ற மணிமேகலைத் தொடரை நினைவூட்டுவதாகும். வாணி தன் துன்பத்தை மனோன்மணிக்குக் கூறும் போது, யாரொடு நோவேன்? யார்க்கெடுத் துரைப்பேன்? வார்கடல் உலகில் வாழ்கிலன் மாளுவன் திண்ணம்; மாளுவன் வறிதே. -அங்கம் 1; களம் 2 : 39.41 என்று வருந்திப் பேசுகிறாள். இவ்விடத்தில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள், == யாரோடு கோகேன் யார்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ யருளிலை யானால் வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே -திருவாசகம் : வாழாப்பத்து : ! என்ற திருவாசகப் பாடலை அப்படியே பெயர்த்தெடுத்துத் தந்துள்ளார் என்பது உண்மையே யன்றோ ! மனோன்மணி, வாணியை எட்யூ ஏசிய நாசியாய்' என விளிக்கின்றாள். இத்தொடர் எட்குலா மலர் ஏசிய காசியாய்" என்னும் கம்பராமாயணத் தொடரைப் பின்பற்றியதாகும். மேலும் வாணி தன் "தந்தையுங் கொடியன் தாயுங் கொடியள்’ என்று பேசுகிறாள். இத்தொடர் கம்பராமா யணlாத்தில் மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் மந்தரை கைகேயின்பாற் கூறும் கூற்றாக வரும், தந்தையுங் கொடியன் கற்றாயுங் தீயளால் என்ற தொடரை நினைவூட்டுவதாம். நாடகத் தொடக்கத்தில் சுந்தர முனிவரை வரவேற்கும் ஜீவகன், அவர் வருகையைப் பற்றிச் சிறப்பாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/237&oldid=856364" இலிருந்து மீள்விக்கப்பட்டது